🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோல்டன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவியேற்றார் நாமக்கல் திரு R.வரதராஜன்!

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட அரிமா சங்கத்தின் நாமக்கல் கோல்டன் சிட்டி கிளையில் 2021-2022 ஆம் ஆண்டின் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திரு R.வரதராஜன். மேலும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் MJF (Melvin Jones Fellowship) பட்டம் திரு.வரதராஜனுக்கு வழங்கியுள்ளார்கள். வரும் 15.08.2021 தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஓசூரில் நடைபெறும் கவர்னரின் பதவியேற்பு விழாவில், MJF பட்டம் பெற்றமைக்காக திரு R.வரதராஜனை கெளரவிக்க உள்ளார்கள். 


மேலும், நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடுவைச் சேர்ந்த ஏழைக்குடும்பத்தைச்சேர்ந்த மருத்துவ மாணவி யாழினிக்கு கல்லூரிக்கட்டணமாக ரூ.1,50,000/- அரிமா சங்கம் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுபோல் பல்வேறு நலத்திட்ட உதவி, மருத்துவ உதவி, கல்விஉதவிகளை ஏழை எளியோருக்கு பெற்றுக்கொடுத்து சமூகபணியாற்றி வருகிறார் திரு.வரதராஜன். 


நமது சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் தேவையான உதவிகளை வழங்க காத்துக்கொண்டிருக்கிறார் திரு.வரதராஜ். தேவைப்படுவோருக்கு இந்த வாய்ப்பை கொண்டுசேர்க்கும் பணியில் பொதுத்தொண்டில் இருப்பவர்களும், கற்றரிந்த இளையோரும் செய்திட வேண்டும். 


இராஜகம்பள சமுதாயத்தை சேர்ந்த நாமக்கல் திரு R.வரதராஜன் அவர்களின் சமூக சேவை மென்மேலும் தொடர நமது இராஜகம்பள சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்..!!

செய்தி & பதிவு : வீரா

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved