🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - கரட்டுப்பட்டி - திரு.R.வரதராஜன்

திரு.R.வரதராஜன் அவர்கள் 08.10.1971-இல் நாமக்கல் மாவட்டம், கரட்டுப்பட்டி கிராமத்தில் திரு.ரங்கசாமி – திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். கோழியின அறிவியலில் (Poultry Science) இளங்கலை பட்டயம் பெற்றுள்ள திரு.வரதராஜன் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.V.சங்கீதா என்ற மனைவியும் V.அரவிந்த் மற்றும் V.அஜெய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 


1998-இல் R.S.S அமைப்பில் இணைந்து பொதுவாழ்வை துவங்கியவர், பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து 2001-ஆம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்ட பி.ஜே.பி-யின்  துணைத்தலைவராக தொடந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசியல் பணியில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் தீவிர ஆர்வம் கொண்டவரான திரு.வரதராஜன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உறுப்பினராக இருந்து சமுதாயப்பணியாற்றி வருகிறார். மேலும் நாமக்கல் கோல்டன் சிட்டி லயன்ஸ் கிளப்-இன் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். இதன்மூலம் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின்பொழுது ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு புத்தாடை, அன்னதானம் வழங்கி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவ -மாணவியர் தொடர்ந்து கல்லூரியில் பயில்வதற்கு உதவி செய்து வருகிறார். திரு.வரதராஜன் அவர்களின் சமூகசேவையைப் பாராட்டி விஜய் டிவி 2019-இல் சிறந்த சமூக ஆர்வலர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. 


தேர்தல் அரசியலில் இதுவரை எந்தவித பதவிக்கும் போட்டியிடாத திரு.வரதாஜன் அவர்கள்,  சாதி, மதம் பாகுபாடின்றி உதவிதேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் இழந்து வாடிய ஏழை-எளிய மக்களுக்கு பாதுக்காப்பு உடை, அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்ததோடு துப்புரவு பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் டீ, பிஸ்கட் வழங்கி வருகிறார். எதிர்வரும் காலங்களில் திரு.வரதராஜன் அவர்கள் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved