🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பிளிப் பேரரசு முதல் கட்டபொம்மன் வரை

கட்டுரையாளர் குறிப்பு:

திரு.மாப்பிள்ளைசாமி R. அய்யனார் அவர்கள், சிவகங்கை சீமையில் கண்டரமாணிக்கத்தில் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட  "காடல்குடி" பாளையக்காரா் குசலவீரகஞ்ஜெய நாயக்கரின் பெயர்த்தியும், விளாத்திகுளம் நல்லப்பசாமி அவர்களின் உடன்பிறந்த மூத்த சகோதரி "தங்கதுரைச்சி அம்மாளின்" மகன் பொன்னுச்சாமி நாயக்கரின் பேரன் ஆவார்.

இவர்களது வம்சாவளியினர் காடல்குடி, குளத்தூர் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி போன்ற பாளையங்களில் பல்வேறு காலகட்டங்களில் திருமண பந்தங்களில் ஈரடுபட்டுள்ள சம்மந்தகாரா்களாவார்கள். இம்மூன்று பாளையங்களின் பெண்வழி வாரிசான இவர்களை "மாப்பிள்ளைசாமி" என்றும் "மாப்பிள்ளைதுரை" என்றும் அழைக்கப்படுவார்கள்.

 கட்டுரையாளர் மாப்பிள்ளைசாமி R.அய்யனார் அவர்கள், சுதந்திர இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலைத்திட்டதின் கீழ் நான்கு வழிச் சாலை அமைக்கும் தனியார் நிறுவனங்களில் சீப் சர்வேயராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30வருடங்கள் சேவைசெய்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர் வேலைநிமித்தமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது நம்மின முன்னோர்களை பற்றியும், அவர்களின் கொடிவழி பற்றியும் ஆய்வு செய்வதை பொழுதுபோக்காக கொண்டவர்.

இப்படி பல்வேறு சமய சந்தர்ப்பங்களில் நாட்டில் அமைந்துள்ள பல்வேறு ஆவணக்காப்பங்களுக்கு சென்று கம்பளத்தார்களின் வரலாற்று ஆவணங்களையும், வரலாற்று ஆய்வாளர்களின் குறிப்புகளையும் சேகரிக்கத்துவங்கிய கட்டுரையாளரிடம் இன்று வரை அவர் சேகரித்துவத்துள்ள ஆவணப்பக்கங்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சத்தை தாண்டும் என்பது நமக்கெல்லாம் வியப்பைத்தருவது.

இந்த ஒன்றரை லட்சம் பக்கம் ஆவணங்களை திரட்ட அவர் செய்திட்ட காலவிரயமும், பொருட்செலவையும் நினைத்துப்பார்க்கையில் அவரை நம் சமூகம் எப்படி போற்றி பாதுக்காத்திட வேண்டும் என்பது நமக்கு விளங்கும்.

இன்று சமூக வலைதளங்களில் கட்டபொம்மனையும், தெலுங்கர்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் சிலர் செய்திகளை பரப்புகையில் உடனுக்குடன் உரிய ஆவணங்களுடன்  எதிர்தாக்குதல் கொடுத்து வாயடைக்கச்செய்வது இவரின் பாணி. தவிர ஆவணக்காப்பகங்களில் வரலாற்று ஆசிரியர்களின் பிரிட்டீஷ் ஆங்கில குறிப்பை எளிய தமிழிலில் மொழிபெயர்ப்பு செய்வதில் இவருக்கு நிகர் வேறுயாருமில்லை என்பது கூடுதல் தகவல்.

இப்படி தான் பல வருடம் சேகரித்த ஆவணங்களை கட்டுரையாக நமக்கு தருகிறார்.










  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved