🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழ்திரு நாட்டின் திசைகாட்டியே! நின் புகழ் ஓங்குக!- வை.மலைராஜன்.

தமிழ் இனத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாளில் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவர். கலை, எழுத்து, அரசியல், ஆட்சி நிர்வாகம் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலின் மையமாக திறந்தவர்.

80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். 1957-2016 ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். அனல்பறக்கும் வசனங்களால் திரை உலகில் தனித்துவம் பெற்றவர். இயல் இசை நாடகம் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்திற்கு 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராக பணியாற்றியவர். அரசியல், ஆட்சி ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இந்தியத் திருநாட்டின் வழிகாட்டியாக பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தியவர். பேருந்துகள் நாட்டுடைமை, குடிசை மாற்று வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநில திட்டக் குழு உருவாக்கம்,  சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைகளில் 30 விழுக்காடு ஒதுக்கீடு,  உழவர்சந்தை,  வருமுன் காப்போம் திட்டம், திருமண உதவித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம்,  கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.6000 நிதியுதவி,பெண்களுக்கு சொத்தில் சம உரிமை,  சத்துணவில் முட்டை,  இலவச எரிவாயு என எண்ணற்ற திட்டங்களை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்,  பொதுவாழ்வில் பெரியார், அண்ணா வளர்த்த உணர்வை போற்றி நின்று அண்ணா வழியில் அயராது உழைத்து ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளம்.


 வாழும்போது வரலாறாகவும்,  மறைந்தாலும் தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் இவ்வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். கலைஞரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும் ! புகழ் ஓங்கட்டும்!

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved