🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நள்ளிரவில் கைது! - கம்பளத்தாருக்கு அடித்த எச்சரிக்கை மணி!

கரூர் அருகேயுள்ள ஜல்லிவாட நாயக்கனூரில் உள்ள இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ள பகுதியில் இலங்கை தமிழ் எதிலிகள் முகாம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்று வந்தன. தற்பொழுது ஆட்சி மாற்றத்திற்குப்பின் உள்ளூர் தலவர்களின் "ஈகோ" அரசியலால், பேருந்து நிலையம் அமைப்பதற்கு பதிலாக, இதுவரை ராயனூரில் இருந்து வரும் எதிலிகள் முகாமை, ஜல்லிவாட நாயக்கனூர் பகுதிக்கி மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த முடிவால்  அப்பகுதியில் நிலவும் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் என்பது அப்பகுதையைச் சுற்றியுள்ள  பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் அச்சம். இதனால் அங்கு எதிலிகள் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாகவே போராடி வருகின்றனர். இப்போரட்டத்தை பண்பாட்டுக்கழக மாவட்டத் தலைவர் சத்திய மூர்த்தி மற்றும் கொள்கைபரப்பு செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் மக்களைத் திரட்டி நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாரிகள் ஆய்வுக்குச் சென்றபொழுது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமுற்ற ஆளும்கட்சியின் முக்கிய புள்ளிகளின் அறிவுறுத்தலின் பேரில் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம் ஆகியோரை நேற்று நல் இரவில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை தீவிரவாதிகளை முற்றுகையிட்டு கைது செய்வதுபோல் இருவரையும் கைது செய்துள்ள காவல்துறை.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மிகாதிகமுள்ள மாவட்டங்களில் கரூரும் ஒன்று. கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர் போன்ற தொகுதிகளின் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய வாக்கு வலிமையுள்ள சாதியாக கம்பளத்தார் வாக்குகள் உண்டு. அம்மாவட்டத்தில் இரண்டு பேரூராட்சி தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், பல உராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்களை வைத்துள்ள சமூகம் கம்பளத்தார் சமூகம்.

இப்படி வலிமையான அரசியல் பின்னனியோடு, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி பொருளாதார ரீதியாகவும் வலிமையாக உள்ளனர். இருந்தும் காவல்துறை ஒரு சமூகத்தின் முக்கிய பிரமுகர்களை கைது செய்யும்பொழுது குறைந்தபட்ச மனித உரிமைகளோடு கூட நடத்தவில்லை என்றால், தமிழக அரசு, காவல்துறை, உள்ளூர் அரசியல்வாதிகளின் கம்பளத்தார் குறித்தான மதிப்பீடு எந்த அளவில் உள்ளது என்பதற்கு சிறு உதாரணமாக அமைந்துள்ளது இந்த நிகழ்வு. காவல்துறை அழைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கூடியவர்களை வலுக்கட்டாயமாக நல் இரவில் வீடு புகுந்து இழுத்துச்செல்வது என்பது அச்சமூகத்தையே கிள்ளுக்கிறையாக அரசும், காவல்துறையும் பார்ப்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

இதேபோன்றுதான் முந்தைய அதிமுக அரசும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுத்தது. தேர்தல் கூட்டணிக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அழுத்தத்திற்கு அதிமுக இணங்கும் என்று தெரிந்து, அதற்கு அரசு அடிபணிந்து மற்ற சமூகங்களின் உரிமைகளை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காக ஆறுமாதம் முன்பிருந்தே சீர்மரபினர் நலச்சங்கம் போராட்டம் நடத்தியும் வன்னியர் இடஒதுக்கீடை தடுத்து நிறுத்திட முடியவில்லை. 

இப்படி சில குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசுகள் துணிந்து எடுக்க காரணம் என்ன? வேறொன்றும் இல்லை, இச்சாதிகள் போராட்டத்திற்கு வரமாட்டார்கள், ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இல்லை, இச்சமூகங்களால் தங்கள் சமுதாய வாக்குகளை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக திருப்பிவிட முடியாது. கட்சிகளி இருப்பவர்களுக்கு சமூகங்களில் செல்வாக்கில்லை, அதிகபட்சம் மது, பணம் கொடுத்தால் வாக்குகளை அறுவடை செய்து விடலாம் என்ற எண்ணமே. கட்சிகளுக்கு இந்த எண்ணம் வருவதற்கு நாமே, நம்மவர்களே துணைபோவது மட்டுமே. 

ஆண்டாண்டு காலமாய் பூர்விகமாய் வாழும் மண்ணின் மைந்தர்களை கைது செய்த முறை, சமுதாயத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி. இப்பிரச்சினைக்குப் பின்னராவது சமூகமாய் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். இதை ஏற்க மறுத்தால் நாளைய சத்தியமூர்த்திகளும், ஏகாம்பரங்களும் நம்மில் யாராவது வேண்டுமானாலும் இருக்கலாம். அநீதிகளுக்கு எதிராகவும், உரிமைகளை பாதுகாக்கவும் போராட மக்களும், அமைப்புகளும் முன்வரவேண்டும். ஏகாம்பரம் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரின் கைதைக்கண்டித்து உடனடியாக போராட்டத்தை அறிவித்துள்ள விடுதலைகளம் கட்சிக்கு வாழ்த்துகள். இன்று நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved