🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 7

விஞ்ஞானமும் மெய்ஞானமும் – பகுதி 7

அன்புச் சொந்தங்களே வணக்கம்! சென்ற வாரம் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதியில், இந்த பிரபஞ்சம் எப்படி அறிவியல் ரீதியாக உருவானது அல்லது உருவாக்கிக்கொண்டு உள்ளது என்பதை பற்றி சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் சிந்திப்போம் வாருங்கள். 

முன்னர் இருந்த தீவிர மற்றும் மிதமான மின்னணு (Electron) மோதல்கள் குறைந்து மின்காந்த துகள்களின் (Electromagnetic Particle) மோதல்கள் முற்றிலும் உறைந்து போய் விட்டது. போட்டான்களுமே தற்சமயம் ஆற்றலை இழந்து particle and antiparticle pair  உருவாக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. அயனிகளால் உருவாக்கப்படும் மின் காந்த அலைகளை உண்டாக்க முடியவில்லை.  டாப்பளர் விதியின் அடிப்படையில் மீதமுள்ள கதிரியக்க அலைகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்த மின்காந்த அலைகளை மைக்ரோ அளவீடுகள் ( microwave observatory) துணை கொண்டு பூமியில் இருந்தும் மற்றும் வெவ்வேறு செயற்கை கோள்களில் இருந்தும் அறிய முடிகிறது.

இதன் மூலம் பெரிய வெடிப்பு ( Big – Bang) நிகழ்ச்சியில் இருந்து மூன்று வித முடிவுகளை விஞ்ஞானம் தந்திருக்கிறது.

1) இந்த பிரபஞ்சம் சீரான வேகத்தில் விரிவடைந்து கொண்டே வருகிறது.

2) ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை பிரபஞ்சம் முழுவதும் அதிகரிக்கும்.

3) பிரபஞ்ச கதிரியக்கம் இருக்கும். The cosmic background radian.

Matter and Radiation, அதாவது நிறையும் மற்றும் கதிரியக்கமும் பிரியும் நிலையில், புவியீர்ப்பு சக்தியின் உதவி கொண்டு இந்த பிரபஞ்சம் விரிவடையும். நிறையின் அளவுகள் மாறும் போது  கோள்கள், துணை கோள்கள் மற்றும் விண்மீன்களின் பிரகாச நிலையை முன்னதாகவே நடைபெற்ற சூப்பர் நோவா  (Super Nova) விளைவால் அடையக்கூடும்.  பின்னர் இன்று நாம் காணும் கோள்களில் ஏதாவது ஒன்றில் உயிரினங்கள் உருவாகி இருக்கலாம் என்கிறது விஞ்ஞானம். இன்று நாம் பூமி என்ற கோளில் கோலோச்சிக் கொண்டு உள்ளோம். இது மாதிரி இன்னும் எத்தனை கோடி கோள்கள் உள்ளதை யார் அறிவார்? தொடர்ந்து வாசியுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம், சிந்திப்போம் !

அன்புடன் உங்கள்

முனைவர்.கெ.நாகராஜன்.
இயற்பியல்துறை பேராசிரியர்,
PSG கலை அறிவியல் கல்லூரி, கோவை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved