🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - பகுதி 10

விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி 10

அன்புச் சொந்தங்களே வணக்கம்! நாம் கடந்த ஒன்பது பகுதிகளில் இந்த பிரபஞ்சம் என்பது எப்படி தோன்றியது என்பதை விஞ்ஞானம் மூலமாகவும், மெய்ஞானம் மூலமாகவும் ஓரளவு அறிந்து கொண்டோம்.

நாம் அறிந்த வரை மெய்ஞானம் என்பது இந்த உலகம் தோன்றியது முதலே உள்ளது. ஆனால் விஞ்ஞானம் என்பது சுமார் நானூறு வருடங்களே பலமையானது. இந்த நானூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மிகவும் அபரீதமானது..  இன்று நாம் கையில் வைத்துக் கொண்டுள்ள கருவியின் மூலம் அதாவது மொபைல் போன் மூலம் உலகின் எந்த மூலையில் நிகழ்ச்சிகள் நடந்தாலும் நம் கண்முன்னே கொண்டு வந்து காணக் கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இது அறிவியல் வளர்ச்சி மூலமே சாத்தியமாகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ரயில்கள் அல்லது வானூர்திகள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் என பல்வேறு சாதனங்களில் மூலம் பயணம் செய்து பலநூறு மைல்கள் தூரத்தை விரைவில் அடையக்கூடிய சாத்தியத்தை நாம் இன்று பெற்றுள்ளோம் என்றால் அது அறிவியல் வளர்ச்சியால் மட்டுமே முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாது. தகவல் தொடர்பு துறை, விவசாய துறை, கல்வி துறை, மின்சார துறை, தொழில் துறை, பதிவு துறை,வின்வெளி துறை, அச்சு துறை, விளையாட்டு துறை, கட்டடத் துறை என அனைத்து துறைகளிலும் விஞ்ஞான வளர்ச்சி மிகவும் அபரீதமானது. ஆனால் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள நமக்கு கல்வி அறிவு கட்டாயம் தேவை. கல்வி அறிவு இல்லாமல் இத்தனை வளர்ச்சியையும் நாம் அனுபவிக்க முடியுமா என்று கேட்டால் அது முடியாது என்று தான் நமது பதில் இருக்கும்.

எனவே, நான் ஏற்கனவே கூறியது போல விஞ்ஞானமும், மொழியும் இரண்டு கண்கள் போன்றது. அதை ஒளிர் செய்வது நமது ஒவ்வொருவரின் முயற்சியில் உள்ளது. விஞ்ஞானத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அவற்றை முறையாக, இயற்பியல் துறை, வேதியியல் துறை, உயிரியல் துறை,தாவிரவியல் துறை,, விலங்கியல் துறை, என பல பிரிவுகளையும் அதன் உட்பிரிவுகளாக கணினி துறைநுண்ணணுவியல் துறைமைக்ரோ,நானோ தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளை கடந்து முன்னேறிக்கொண்டே சென்று கொண்டே உள்ளது.

இதன் ஆரம்பமாகிய புவியீர்ப்பு விசைநீயூட்டனின் அடிப்படை விதிகள்பரிமான வளர்ச்சி விதிகள், கெப்லரின் கோள்கள் விதி , மின்காந்த அலைகள், மின்காந்த கோட்பாடுகள் என பல்வேறு விதிகளால் விஞ்ஞானம் கட்டமைக்க பெற்றுள்ளது என்பதையும் அதன் வளர்ச்சியையும் அடுத்த பகுதியில் சிந்திப்போம்  மீண்டும் சந்திப்போம்!

என்றும் அன்புடன் உங்கள்

கெ.நாகராஜன்

முனைவர் நெ. நாகராஜன்,

இயற்பியல் பேராசிரியர்,

பூ.ச.கோ, கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயமுத்தூர்.

குறிப்பு: அடுத்த பகுதியில் இந்த பத்து வாரங்களாக நாம் தொடர்ந்து சிந்தித்தப்பகுதியில் இருந்து கேள்வி-பதில்கள் இடம் பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved