🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் பகுதி-18

அன்புச் சொந்தங்களே வணக்கம்!

இந்த ஆங்கில புத்தாண்டு முதல் அனைவரும் ஆரோக்கியமுடனும் சுருசுருப்பாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இங்கே இறைவன் என்பவர் யார்? எங்கு இருப்பார்?அவரை எப்படி சந்திப்பது? அவர் கருப்பா அல்லது சிவப்பா! நெட்டையா அல்லது குட்டையா ? உருவமா அல்லது அரூபமா? இப்படி ஆயிரம், ஆயிரம் கேள்விகள் மனதில் எழும் இல்லையா! இதை அறிவதுதான் மெய்ஞானம்.

கண்ணுத லான் காதலின் நிற்கவும்

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்

மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்

அண்ணல் இவர்என் றறியகி லார்களே!

என்கின்றது திருமந்திரம்.

அதாவது, மனிதர்களும், தேவர்களும் இறைவனை தேடித் தேடி பலர் மறித்து விட்டனர். அவர்களில் யாரும் முக்கண் தரித்தவரே இறைவன் என அறிகிலர். இதை தனது மெய்யன்பர்களுக்கு கூறும் ஒருவர் இருந்தும் அறிகிலர் என திருமுலர் கூறுகிறார்.

இதுதான் உண்மை. ஒருவர் தன்னை பற்றி அறியாமல், இறைவனைப் பற்றி அறிவது என்பது கடினம். இதற்கு சரியான பதில்கள் ஆத்ம விசாரணை மட்டுமே!

அதாவது, நான் யார்? எங்கு இருந்து வந்தேன்! எனது வாழ்க்கைக்கு பின்னர் நான் எங்கே போகிறேன் என பல வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் நாம் இறைவனை எப்படி தேடி கண்டு பிடிப்பது?

இதை தேடித் தேடி கண்டு அறிந்தவர் தான் ரமண மகரிஷி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த மிகப்பெரிய ஞானி.

தன்னுடைய தேடுதல்களால் பல கேள்விகளுக்கு விடை கண்ட விஞ்ஞானி.

விஞ்ஞானிகள் கண்டறியாத பல வினாக்களுக்கு தன்னுடைய மெய்ஞான த்தால் விடை தந்தவர்.

எனவே, நாம் இறைவனை காண முதலில் நம்மைப் பற்றி அறிய வேண்டும். இறைவனை அதாவது இந்த பிரபஞ்சத்தை படைத்தவனை அறிவதை சிந்திப்போம் வாருங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved