🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேரா.கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும் மெய்ஞானமும் - 29

அன்புச் சொந்தங்களே வணக்கம், அனைவருக்கும் சோபகிருது வருசத்திய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 

கடந்த நான்கு வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு ஆற்றல் நிலைகளில் முதல் நான்கு ஆற்றல் நிலைகளாகிய மூலாதாரம்,   சுவாதிஷ்டானம்,  மணிபூரகம் மற்றும் அனாகதம் பற்றி அறிந்து கொண்டோம்.

 இந்தப் பதிவில் நாம் ஐந்தாவது சக்கரமாகிய விசுக்தி சக்கரத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

'விசுத்த' என்றால் 'மிகத் தூய்மையான', என்று பொருள். விசுத்தி சக்கரம் ஆங்கிலத்தில் Throat Chakra என்று அழைக்கப்படுகிறது. தொடர்பாடல் மற்றும் உண்மையின் மையமாக இருப்பது விசுத்தி சக்கரமாகும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் உள்ளத்தில் உள்ளதை நேர்மையாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறும் தன்மைக்குமான மையம் விசுத்தியாகும்.


அனாகத்திலிருந்து 12 விரக்கடை மேல் விசுக்தி அமைந்துள்ளது. அறுகோணம் நட்சத்திர வடிவம் கொண்டது அதைச் சுற்றி வட்டம் உள்ளது. அதனைத் தொடர்ந்து பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை கருப்பு நிறத்தில் தொண்டையின் மத்தியில் அமைந்துள்ளது.

இருப்பிடம்:  தொண்டை மத்தி

நிறம்:  கருப்பு 

ஒலி:  வங் 

தொடர்புடைய மூலகம்:  காற்று

தொடர்புடைய புலன்:  நாதம் 

இத்தலத்தின் பூதம்: வாயு

வேதம்: அதர்வண வேதம்

தொழில்: மறைத்தல் 

அதிதேவதை: மகேசனும், மகேஷ்வரியும்

நிற்றல், நடத்தல், ஓடல், மயங்கல், கலங்காது இருத்தல் ஆகிய ஐந்து செயல்களும் இங்கிருந்து தான் நடைபெறுகின்றன.விசுக்திதான் உணவின் சுவை அறிதல், இசையை ரசித்தல், கோபம் கொள்ள வைத்தல், சண்டையிடல், மனச் சுமைகளை தாக்குதல் ஆகிய செயல்களுக்கு காரணமாக உள்ளது.

விசுக்தி எனும் கண்டம் தான் நடுமூலம் ஆகும்.கண்டத்தில் பல அடைப்புகள் உள்ளன. சளியும் அடைத்துக் கொண்டு தடை செய்யும். விசுக்தியில் இருந்து கேசரி யோகம் செய்தால் சளி தொல்லை மற்ற அடைப்புகளும் நீங்கும். எதிரில் நிற்பவர்கள் மனதைக் கூட அறிந்திட முடியும்.

மீதமுள்ள சக்கரங்கள் பற்றி அடுத்த வாரம் சிந்திப்போம்.

என்றும் அன்புடன் உங்கள்

முனைவர் கெ நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved