🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சகாப்தத்தின் சாட்சி நெல்சன் மண்டேலா - கறுப்பின மக்களின் மீட்பர்

சகாப்தத்தின் சாட்சி நெல்சன் மண்டேலா:

1962 ஏப்ரல் 06 நாள் வெள்ளையர்கள் தென் ஆப்ரிக்கா கேப் முனையில் காலடி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை அடிமைப்படுத்தி இருண்ட கண்டமான ஆப்ரிக்கா முழுவதும் வெள்ளையருக்கே சொந்தம் என்று கொண்டாடி பூர்வகுடி மக்களான ஆப்ரிக்கா மக்களுக்கு எதிராக நிறவெறி சட்டங்களை உருவாக்கி கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டு வந்த காலகட்டத்தில் ஒரு கவிஞன் எழுதினான் வெள்ளையர்கள் எங்கள் நாட்டுக்கு வந்தபோது எங்களிடம் நாடு இருந்தது அவர்களிடம் வேத நூல் இருந்தது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களிடம் வேதநூலும் அவர்களிடம் நாடும் போய்விட்டது என்று வருத்தம் தோய்ந்த கவிதையை பதிவு செய்தார்.

விடுதலை: 

அடிமைத்தலையிலிருந்து மார்க்ஸியத்தை உள் வாங்கி உலக நாடுகள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் வைகறை பொழுதுகளில் தென் ஆப்பிரிக்கா நாட்டின் சோசா இன குழுவின் தலைவர் சிற்றரசை போன்று வாழ்ந்த திரு காட்லா ஹென்றி திருமதி நோங் கெனிபேனி தம்பதியின் மகனாக 18.07.1918 அன்று நெல்சன் மண்டேலா பிறந்தார். 

இளமைக் காலம்:

இளம் பிராயம் பள்ளி கல்லூரி விளையாட்டு என்று சுழன்று ஓடி விட்டது. இவர் ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரர். 1942 பி.ஏ பட்டம் அதற்கு பின் வழக்கறிஞர் என்று படிப்படியாக முன்னேறி சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்று தனது இன குழுக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீறி நண்பனுடன் இணைந்து ஊரை விட்டு வெளியேறி பெரிய நகரங்களில் சுரங்கங்களில் பணியாற்ற சென்றபோதுதான் இந்தியாவில் ஒட்டிப்பிறந்தாலும் ஒதுக்கி வைக்கப்படுகின்ற இடதுகை போன்ற தீண்டாமை கொடுமையைப் போன்று நிறவெறியில் ஒதுக்குதலும் ஓரங்கட்டுதலையும் சந்திக்க நேர்ந்தது. இதிலிருந்து விடுவிப்பதற்கு சுய போராட்டம் சட்ட போராட்டம் என்று கடந்து வந்த வேளையில் தங்களுக்கான கலப்படமற்ற சுத்த தூய்மையான ஆப்பிரிக்கா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஆப்பிரிக்கர்களால் தான் ஆப்பிரிக்காவை விடுதலை செய்ய முடியும் என்ற அழுத்தமான தத்துவார்த்தக் கொள்கையை கொண்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வெள்ளையர்கள், வெள்ளையர்களால் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் என்ற இந்த முக்கோண அரசியல் கருத்தியல் மீது வெறுப்பு கொண்டு பேசி வந்தார். 

மார்க்ஸியம் :

இக்காலகட்டத்தில் தான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற ஏராளமான குருதியை சிந்தி எல்லா மனித மனங்களையும் சுதந்திரத்தை நோக்கி திருப்பி விட்ட எல்லாம் புரட்சி போராட்டங்களிலும் காரல் மார்க்ஸின் சித்தாந்தமே மெல்லிய இழையாக ரத்தமும் சதையுமாக பின்னி பிணைந்து போராட்டத்தை கூர்திட்டும் அறிவாயுதமாக இருந்ததை மறுப்பார் யார் உள்ளார். அந்த கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது பற்று ஈர்ப்பு இருந்தாலும் அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை நினைத்து பாரமுகமாத்தான் இருந்தார் நெல்சன் மண்டேலா. ஆனால் அதைப் புரிந்து தெரிந்து கொண்டு எதிர் கருத்தியலை பேச அதைப் பற்றி அறிந்து கொள்ள காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் புத்தங்களை வாசிக்க தொடங்கி அதையே வாழ்வியலாக ஏற்றுக் கொள்ளும். பக்குவம் மெல்ல மெல்ல அரும்பத்துவங்கியது. அதன் விளைவாக கம்யூனிஸ்ட் வெறுப்பை கைவிட நேர்ந்தது. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க பயன்பட்ட உழைப்பும் சேர்ந்தது தான் என்பதை புரிந்து கொள்கிறார். 

இது குறித்து அவரிடம் நண்பர் கேட்ட கேள்வி கலப்படமற்ற ஆப்பிரிக்க தேசியவாதமும், இயக்கவியல் பொருள் முதல் வாதமும் எவ்வாறு ஒன்றிணைந்து செல்ல முடியும்? என்ற கேள்விக்கு மண்டேலா சொல்கிறார், முதலில் நான் ஆப்பிரிக்கன் எனவே என் நாட்டு விடுதலையை கோருகிறேன். அதேவேளையில் ஆப்பிரிக்கா இந்த பூமி பந்தில் தானே உள்ளது. அதற்கு மாற்றம் என்னும் மார்க்ஸியம் எவ்வாறு அன்னியப்படும் என்று விவாதிக்கிறார். எனவேதான் ஜோகன்னஸ்பர்க் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் காரல் மார்க்ஸ் லெனின் பட வரிசையில் நெல்சன் மண்டேலா படமும் இடம்பெற்றுள்ளது.

சட்ட மறுப்பு: 

1962 ஏப்ரல் 06 வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவில் கால் பதித்த தினத்தன்று சட்ட மறுப்பு போராட்டத்தை முன்னெடுத்து ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கவினருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து களம் காணுகின்றார். இக் காலகட்டத்தில் தான் போராட்டக் குழு முடிவு செய்கிறது, தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசால் எமது மக்களின் பிறப்புரிமை பறிக்கப்பட்டது நிலம் பறிக்கப்பட்டு விட்டது. ஏற்றத்தாழ்வையும், அநீதியையும் அடிப்படையாகக் கொண்டு நிறவெறி அரசு இருந்து கொண்டு வருகிறது. இதனை வீழ்த்தி ஜனநாயக முறையில் மதம், இனம், நிறம், பால் வேறுபாடுகள் இல்லாத அரசை உருவாக்க அனைவரும் சேர்ந்து போராடி விடுதலை பெறுவோம் என்று எடுக்கப்பட்ட முடிவுக்கு வடிவம் கொடுக்கின்ற விதத்தில், எந்தப் போராட்டத்தை கையில் ஏந்துவது என்று எண்ணுகின்ற போது தான்,  காந்தியடிகளின் சாத்வீகப் போராட்டமா? அல்லது ஆயுதம் தாங்கி போராடுவதா? என்ற போது, தேவைப்பட்டால், காலத்திற்கு கேற்றார் போன்று சூழ்நிலைக்கு தகுந்த போராட்ட வடிவங்களை எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் பொன்மொழி "Non violent wherever possible violent wherever necessary - நான் வயலன்ட் வேறேவர் பாசிபிள் வயலன்ட் வேர் எவர் நெசசரி" என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில், அமைதியான சமாதான உடன்படிக்கை காட்டிலும், நேர்மையான யுத்தத்தை செய்வோம். ஜனநாயகவழி போராட்டம், சட்டவழிப் போராட்டத்தில் பெரும்பாலும் நீதி கிடைப்பதில்லை. எனவே ஆயுதபாணி போராட்டத்திற்கு இளைஞர்கள் தயார். தேசத்தின் ஈட்டி என்ற அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் ஆயுத பயிற்சி அளிக்க ஆயுதம் வாங்குவதற்காக 1962 ஆம் ஆண்டு அடிஸ் அப்பாவில் ஆப்பிரிக்க நாடுகளின் சுதந்திரப் போராட்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பங்கேற்க மண்டேலாவிற்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. மகிழ்ச்சியோடு முதன் முதலாக நாடு கடந்து சென்று பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து பேசி ஆயுதம் நிதி உதவி கோருகிறார். உத்திரவாதம் கிடைத்தது மகிழ்ச்சியோடு நாடு திரும்பினார்.

கைதி எண் 46664:

அதற்குப் பின் ஆயுதம் வாங்கவோ பயிற்சி பெறவோ படை திரட்டவோ வாய்ப்பு இல்லாமல், 1962 ஆகஸ்ட் மாதம் 05 தேதி நெல்சன் மண்டேலாவின் 44 வயதில் கைது செய்யப்பட்டு, போலியான விசாரணைக்குப் பின்னர் குற்றவாளியாக அறிவித்து ராபன் தீவு சிறையில் கைதி எண் 46664 வழங்கப்பட்டு, சிறிய அறையில் அடைக்கப்பட்டார். அது ஒரு நாள் இரு நாள் அல்ல 27 ஆண்டுகள். 

கவிதை :

அந்த சிறை வாழ்க்கையின் போது 1962 பின்னால் பிறந்த கவிஞனின் கவிதை வரிகள் நெல்சன் மண்டேலா அவர்களின் சிறைவாசத்தின் வலிகளை சுமந்து அவரின் பொன்மொழியான என் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாம். ஆனால் எனக்கு வலிக்கும் என புரிந்து கொண்டால் போதும் என்பதை நினைவு கூறும் வகையில் எழுதப்பட்டது.

தலைமுறை  மண்டேலா 

என் பெற்றோர் காதல் வயப்பட்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டதன் பயனாக என் தாய் கருவுற்றால் 

மண்டேலா அப்போது நீ சிறையில் இருந்தாய்!

10 மாதம் கழித்து என் தாய் என்னை பிரசவித்தால் 

மண்டேலா நீ சிறையில் இருந்தாய்!

ஆண்டொன்றுக்கு பின்னால் முதல் பிறந்தநாள் கொண்டாடினார்கள் 

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

மண்டேலா நான் மழலை மொழி பேசி பள்ளிக்கு சென்று படித்து முடித்தேன்

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

மண்டேலா கனவுகளை விதைக்கும் கல்லூரிக்கு சென்று பட்டம் படித்து முடித்தேன்

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

நான் காதலித்தவளை கரம் பற்றி வாழ்க்கை பயணத்தை தொடங்கினேன்

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

என் தாம்பத்திய வாழ்க்கையின் பரிசாக என் மனைவி கருவுற்றால்

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

10 மாதம் கழித்து என் மனைவி அழகான ஒரு குழந்தையை பிரசவித்தால் 

மண்டேலா அப்போதும் நீ சிறையில் இருந்தாய்!

என்ற ஒரு தலைமுறை சிறை வாழ்க்கையை கவிதை வரிகாளக்கினான். இந்த பிரசித்திபெற்ற வரிகளை பாப் இசைப் பாடகர்கள் 

ஃப்ரீ நெல்சன் மண்டேலா 

ஃப்ரீ ஃப்ரீ நெல்சன் மண்டேலா 

தனிமனித ராணுவமாக 

சிறையில் சுதந்திரமாக 

சிந்தித்துக் கொண்டிருக்கும் மண்டேலாவை 

விடுதலை செய் 

மண்டேலா சிறையில் இருப்பதை 

நீ உன் கண்களால் பார்க்கவில்லையா?

நீ உன் காதுகளால் கேட்கவில்லையா?

இதுகுறித்து, உன் வாயால் பேசவில்லையா?

ஃப்ரீ ஃப்ரீ நெல்சன் மண்டேலா என்ற பாட்டுடை நாயகனாக மண்டேலா பரிணமித்தார். உலகத்தின் பேசு பொருளாக போராட்டக் காரர்களின் ஆயுதமாக மண்டேலா சிறை வாழ்க்கை அமைந்தது. அவர் வேண்டிய சுதந்திரத்தை 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கை ஜனநாயகத்தின் வாசலை திறந்து வைத்தது.  

விடுதலை :

11.02.1990 ஆம் ஆண்டு 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப் பின் நெல்சன் மண்டேலாவின் 71 வயதில் விடுதலை செய்யப்பட்டார். 

சபதம்:

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் என்ற மண்டேலாவின் பொன்மொழிக்கு இலக்கணமாக விடுதலை அடைந்த பின் பேசும் போது சொன்னார், என் விடுதலை முடிவல்ல அரசியல் அதிகாரத்தில் வெள்ளை இனவெறி அரசுக்கு முடிவு கட்டி கருப்பர்களுக்கு சம உரிமை கிடைக்க செய்யும் போராட்டத்தின் துவக்கம் என்று சொன்னார்.

பாரத ரத்னா, நோபல் பரிசு:

1990 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா இந்தியர் அல்லாத ஒருவருக்கு முதலும் கடைசியுமாக  அன்றைய மாண்புமிகு பாரதப் பிரதமர் சமூகநீதி காவலர் மண்டல் கமிஷனை நிறைவேற்றிய விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி பி சிங் அவர்கள் தலைமையிலான அரசு நெல்சன் மண்டேலா  அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவித்தது. 1993 ஆம் ஆண்டு உலகின் உயர்ந்த விருதான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டார்.           

முதல் அதிபர்: 

1994 ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்டு வெள்ளையர் அல்லாத முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதிபராக பொறுப்பேற்றபின் தென்னாப்பிரிக்கா புதிய பாதையில் மறுமலர்ச்சியை உருவாக்கி எல்லோருக்குமான ஆட்சியை வழங்கினார். இந்தியர்களின் நலனில் அக்கறை கொண்டு பள்ளிகளில் தமிழ், இந்தி, உருது உள்ளிட்ட இந்திய மொழிகளை விருப்பப்படமாக கற்பிக்கப்பட்டது. 

காதல் மனைவி விண்ணி மண்டேலா:

அன்பின் தோழமைகளே, இக்கால கட்டத்தில் தான் தன் காதல் மனைவி விண்ணி மண்டேலா ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கொலை பழி சுமத்தினர். இந்த குற்றச்சாட்டில் இருந்து தனது சுய முயற்சியால் சட்டப் போராட்டத்தை நடத்தி விடுதலை பெறட்டும், என்னுடன் இருந்து வெற்றி பெற்றால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் தவறாக பயன்படுத்தியும் தப்பித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்ற சந்தேகத்தின் நிழல் கூட தன் மீது படக்கூடாது என்று எண்ணி இடற் மிகுந்த லட்சியப் பயணத்தில் துணை நின்று 27 ஆண்டுகள் நெடிய போராட்டங்களை நடத்தி குடும்பத்தையும் பாதுகாத்து வந்த தன் காதல் மனைவியை விட்டு பிரிகிறார். 

நான் முதன்முதலாக அவளைப் பார்த்த நாள் துவங்கி சிறையில் இருந்த காலத்திலும் சுதந்திரப் பறவையாக வெளியே வந்த பின்னும் மாறாத அன்போடு இருந்த என் காதல் மனைவியிடமிருந்து எவ்வித வெறுப்பும் குற்றச்சாட்டுமின்றி கனத்த இதயத்தோடு விளக்குகிறேன் என்று எழுதுகிறார்.

ஜனநாயக சுடரொளி;

ஐந்தாண்டு கால ஜனநாயக ஆட்சிக்கு பின்னால் 1999 ஆம் ஆண்டு அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கட்சி விரும்பியது, குடும்பம் விரும்பியது, அதை கடந்து தென்னாப்பிரிக்கா மக்கள் கண்ணீரோடு வேண்டுகோள் வைத்தனர். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின, தொலைக்காட்சிகள் விவாதித்தன. ஆனால் அவர் ஏற்றுக்கொண்ட லட்சிய முடிவிலிருந்து பின்வாங்காமல் இறுதிவரை உறுதியாக இருந்து தன்னுடைய சக போராளி ஒருவரின் பெயரை அதிபருக்கு முன்மொழிந்து ஜனநாயக  சுடரொளியை ஏற்றி வைத்த போதிமரத்து புத்தன் நெல்சன் மண்டேலா அவர்கள்.

விடியலின் மறைவு:

தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் சிறந்த சமூக செயல்பாட்டாளராக பல்வேறு நிலையில் களமாடி வந்தவர் 2013 ஜூன் 8ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,05.12.2013 அன்று மண்டேலாவின் 95 வது வயதில் இயற்கை எய்தினார். உலக மக்களின் கண்ணீர் துளிகளைப் பெற்ற மகத்தான மனிதராக மண்டேலா விளங்கினார். 

19 ஆம் நூற்றாண்டில் உலகம் அதிகமாக உச்சரித்த பெயர்கள் காந்தி, காரல் மார்க்ஸ், லெனின், மாவோ, சன்யாட்சன், ஹோசிமின், உமர் முக்தார், யாசர் அராபத், ஆபிரகாம் லிங்கன் அந்த வரிசையில் நெல்சன் மண்டேலாவும் அசைக்க முடியாத சக்தியாக வலிமையான ஆளுமையாக திகழ்கின்றார். 

லண்டன் அருங்காட்சியகத்தில் சிலை:

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் உலகம் ஆராதிக்கின்ற ஆளுமைகளின் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் நாள் வின்சென்ட் சர்ச்சில், ஆபிரகாம் லிங்கன் சிலைகளுக்கு அருகில் நெல்சன் மண்டேலாவுக்கு வெண்கலை சிலை எழுப்பப்பட்டது. இது குறித்து மண்டேலா பேசுகின்ற போது சொல்லுகிறார், 1962 ஆம் ஆண்டு நான் கண்ட கனவு நனவாகி இருக்கிறது என்ற வெளிப்படுத்துகிறார்.

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்:

நெல்சன் மண்டேலா பிறந்த ஜூலை 18 தேதியை ஐநா மன்றம் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்து, உலக அளவில் சிறைவாசிகளின் உரிமைகள் சிறை சீர்திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வழிகாட்டுதல் வழங்கும் தினமாக அறிவித்து வருகிறது.

திராவிட ரத்னா வைகோ: 

அந்த மண்டேலாவின் விடுதலையை நோக்கி நீண்ட பயணம் என்ற வரலாற்று நூலை 2002 ஆம் ஆண்டு பொடா சட்டத்தை எதிர் கொள்ள அமெரிக்கா நாட்டின் சிக்காகோ நகரில் இருந்து சென்னை நோக்கிய விமான பயணத்தில் திராவிட ரத்னா தமிழினக் காவலர் தலைவர் திரு வைகோ எம்பி அவர்கள் கையில் ஏந்தி வந்து 19 மாதம் 1 3/4 வருடம் 577 நாட்கள் வேலூர் சிறையில் தவவாழ்கை நடத்தினார். சிறை பல உலகத் தலைவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய இடம் சிறை  புத்தக வாசிப்பை அனுமதித்தால் சிறையும் சுதந்திரமான இடம்தான் என்ற மண்டேலாவின் பொன்மொழிக்கு இலக்கணமாக தலைவர் வைகோ எம்பி அவர்கள் புத்தக வாசிப்பு சொந்த அனுபவங்களைத் தொகுத்து சிறையில் விரிந்த மடல் என்ற வரலாற்று புதினத்தை தமிழ்க் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார்.

கட்டுரையாளர்: மல்லை சத்யா,
துணைப்பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.

நன்றி:தீக்கதிர்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved