மலபாரில் மாப்பிள்ளைமார் கலகம் ஏன்?
யார் இந்த மாப்பிள்ளைகள்?
கிபி முதல் நூற்றாண்டிலிருந்து அரேபியர்கள் சேரநாட்டோடு வணிகத்தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களில் பலர் கேரள பெண்களை மணந்து கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள்தான் மாப்பிள்ளைக்கள் (மாப்ளா). இவர்கள் விவசாயத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒரு சமூகத்தினர்.
மதராஸ் மாகாணத்தின் ஒருபகுதியாகவும், தற்போதைய கேரளா மாநிலத்திலுள்ள மலபார் பிரதேசத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், உயர்சாதி நிலச்சுவான்தார்களையும் எதிர்த்து மாப்ளா முஸ்லிம்கள் 1836-1921 வரை 85 ஆண்டுகள் நீடித்த கிளர்ச்சி மாப்பிள்ளைமார் கலகம் என்றழைக்கப்படுகிறது. 1800 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற முதல் மாப்ளா கிளர்ச்சிக்குப்பிறகு இறுதியாக, 1921 ஆகஸ்ட் மாதத்தில் 22 வட்டாரங்களில் சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்ற மாபெரும் கிளர்ச்சியில், சுமார் 10,000 பேர் மரணமுற்றனர். கொடிய அந்தமான் சிறையில் மட்டும் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 42 பேருக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு ஆயுள்தண்டனை விதித்தது.
1921 கிளர்ச்சிக்கு முன்புவரை முஸ்லிம்கள் மேற்கொண்ட 29 தாக்குதல்களில் மொத்தம் 82 பேர் கொல்லப்பட்டனர். அதில் பார்ப்பனர்கள் மட்டும் 29 பேர். மற்றவர்கள் அவர்களின் உறவினர்களாகவும், அவர்களிடம் வேலை செய்த பிற சாதியினராகவும் இருந்தனர். இவர்கள் அனைவரும் நிலப்பிரபுக்களாக அல்லது நிலப்பிரபுக்களின் இடைத்தரகர்களாக இருந்தனர்.
ஆங்கிலேயர்கள், நிலப்பிரபுக்கள், இடைத்தரகர்கள் ஆகியோரால் கடுமையாகச் சுரண்டப்பட்ட ஏழை குத்தகை விவசாயிகள்தான் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். குத்தகைக் காலம் முடியும் முன்பே நிலத்திலிருந்து வெளியேற்றுவது, குத்தகைக் கட்டணத்தை உயர்த்துவது ஆகியவையே இதில் பிரதானப் பிரச்னைகளாக இருந்தன. இதில் நிலப்பிரபுக்களே மிக முக்கியப் பங்கு வகித்தனர்.
இது ஒரு வர்க்கப் போராட்டம் என்றபோதிலும், இந்து என்ற வகைமைக்குள் உள்ளடக்கப்பட்ட பல்வேறு சாதியினர் நிலப்பிரபுக்களின் அடக்குமுறையைச் சகித்துக் கொண்டபோது, முஸ்லிம்கள் மட்டும் கிளர்ந்தெழுந்தது ஏன்? அதற்கு ஒரே காரணம் இஸ்லாம் மட்டுமே. அதுதான் ஒன்றிணைவதற்கும் (எ.கா. பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்றுகூடுவது) போராடுவதற்கும் வலிமை கொடுத்தது. ஒருசில தருணங்களில் இந்தக் கிளர்ச்சிகளில் ஆலிம்களும் (மார்க்க அறிஞர்கள்) பங்கேற்றனர். பந்தலூர் மலையைச் சுற்றிலும் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே அனைத்துக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
திப்பு சுல்தான் காலத்தில் பார்ப்பன நம்பூதிரி நிலப்பிரப்புகள் மலபார் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில், திப்பு கொல்லப்பட்ட பிறகு மீண்டும் பார்ப்பன நம்பூதிரிகள் மலபார் பிரதேசத்திற்குத் திரும்பி நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். அதற்கு பிரிட்டிஷ் ஆதரவும் இருந்தது. ஏனெனில் பிரிட்டிஷாருக்கு ஒத்துழைக்காத, அடங்க மறுத்த மாப்ளா நிலப்பிரபுக்களைக் காட்டிலும் அவர்களுக்கு அடங்கிப்போன இந்து நிலப்பிரபுக்களே பிரிட்டிஷாருக்கு முக்கியமானவர்களாக இருந்தனர். அதனால் ஆங்கிலேயர்கள் மீது மாப்ளா முஸ்லிம்கள் தீராதப் பகையைக் கொண்டிருந்தனர். அது 1947ல் ஆங்கிலேயர் இங்கிருந்து வெளியேறும்வரை தொடர்ந்தது. மாப்ளா முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக மாப்ளா சட்டம் (Mappila Outrageous Act) கொண்டுவரப்பட்டது.
1921- 22 காலத்திய மாப்ளா கிளர்ச்சி போன்று தென்னிந்தியாவில் இது போன்ற ஒரு மதக்கலவரம் இதற்கு முன்னும் பின்னும் நிழந்ததே இல்லை. இந்துக்களில் பலர் மாப்பிள்ளைகளால் பலாத்காரமாக மதமாற்றம் செய்யப்பட்டனராம். ராஜாஜியும் யாகூப் ஹசனும் கலவரப் பகுதிக்குச் சென்று மக்களிடையே அமைதி நிலைநாட்ட அகிம்சைப் பிரச்சாரம் செவதற்கு சென்னை மாகாண அரசிடம் அனுமதி கோரினர்.
அச்சமயத்தில் ராஜாஜி காங்கிரஸ் மகாசபையின் பொதுச் செயலாளராக இருந்தார். அந்நாளில் வகுப்புக் கலவரம் எங்கு நடந்தாலும் அங்கு தாமதமின்றி தேசியத் தலைவர்கள் செல்ல விரும்புவது வழக்கம். அரசு அவர்களுக்கு அனுமதி தர மறுப்பதும் வழக்கம். நாட்டில் உருவாகி வந்த இந்து முஸ்லீம் ஒற்றுமையை உடைக்க அரசு மலபார் சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டது. மாப்பிள்ளைமாரில் பலர் இந்து நிலப்பிரபுக்களிடம் குத்தகைதாரராக இருந்தனர்.
மலபார் செல்லும் வழியில் ராஜாஜியும், ஹசனும் தடுக்கப்பட்டனர். அதனால் திரும்பும்போது ‘இந்த அடக்கு முறை ஆட்சியாளர் வைத்த பொறியில் சிக்கி விட வேண்டாம்’ என மாப்பிள்ளைமார்களை எச்சரித்து அறிக்கை விட்டனர். மாப்பிள்ளைமார் மிகுதியாக வாழும் இரண்டு தாலுகாக்களில் ராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக 2339 பேர் இறந்தனர். 24,167 பேர் கடுந்தண்டனைகளுக்கு ஆளாயினர். 150 மாப்பிள்ளைக் கைதிகள் ஒரு கூட்ஸ் ரயில் பெட்டியில் அடைத்துக் கொண்டு போகப்பட்டனர். அவர்களில் 66 பேர் மூச்சுத் திணறி இறந்தனர். இது ‘மரண வண்டி நிகழ்ச்சி’ எனப் பெயர் பெற்றது.
மெட்ராஸ் அரசு இதற்காக ஒரு விசாரணை கமிசனை அமைத்தது. விசாரணையின் முடிவில், 30.8.1922-ம் தேதியன்று அரசு பின்வரும் ஆணையை வெளியிட்டது:

