🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக வெற்றிக்கு கைகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள்!-பகுதி-3

தொடர்ச்சி-3

உண்மையில் அங்கு நடந்தது என்ன? தென்மாவட்டங்களில் “DNT” சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வீரியமாக போராடிக்கொண்டிருந்த வேளையில், கொங்கு மண்டலத்தில் DNT பட்டியலில் உள்ள தொட்டிய நாயக்கர், போயர், மற்றும் வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தினரும் அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். ஆனால் அரசுக்கெதிரான இந்த எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அதை வாக்குகளாக மாற்றுவதற்குறிய தலைவர்கள் இச்சமுதாயத்தில் யாரையும் கட்சி உருவாக்கவில்லை. அதேபோல் கட்சியின் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்தப்பிரச்சினை குறித்து எந்தப்புரிதலும் இல்லை. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மாவட்ட நிர்வாகமும், திமுக வேட்பாளர்களும், DNT பிரச்சினையில் தீவிரமாக போராடிக்கொண்டிருந்த தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்க தலைவர்களை மிகச்சரியாக பயன்படுத்தி வெற்றிபெற்றனர்.

இதன்பலனாக எடப்பாடியின் நிழலாக செயல்பட்ட வலிமையான அமைச்சர் தங்கமணி அவர்கள் இருந்தும், மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் தொட்டிய நாயக்கர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளான நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு ஆகிய நான்கு தொகுதியையும் திமுக கைப்பற்றியது. நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக-வின் தோல்விக்கு தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகளே காரணம் என்பது அதிமுக-வினரே ஒப்புக்கொண்ட உண்மை. அதேபோல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இச்சமூக வாக்குகள் உண்டு. செந்தில்பாலாஜி திமுக-விற்கு வரும்வரை அரவக்குறிச்சி நகரச்செயலாளர் பதவிமட்டுமே இச்சமூகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் செந்திபாலாஜியின் வருகைக்குப்பின் அரவக்குறிச்சி ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒன்றை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு.மணிகண்டனுக்கு வழங்கினார்.

இதன் பலனாக மணிகண்டன் பொறுப்பேற்றிருந்த பகுதியில் மட்டும் 1700 வாக்குகளை திமுக வேட்பாளருக்கு அதிகம் பெற்றுக்கொடுத்து தன் நியமனத்தை நியாப்படுத்தினார். மேம்போக்காக பார்த்தால் அதிகம் பெற்ற வாக்குகள் குறைவாக தெரியலாம். ஆனால் இப்பகுதியில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஓரிருவரைத் தவிர அனைவரும் அதிமுக-வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியதால் அதன் தாக்கம் அரவக்குறிச்சி தொகுதி தாண்டி, அதை ஒட்டியுள்ள கிருஷ்ணராயபுரம் தொகுதியிலுள்ள தொட்டியநாயக்கர் சமூக வாக்குகளும் திமுக-விற்கு கிடைத்தது. இதனால் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. இதனால் ஒருசில ஆண்டுகளுக்கு முன் கட்சிக்கு வந்த செந்தில்பாலாஜி திமுக தலைவரின் குட்புக்கில் இடம்பெற்று, இன்று அமைச்சரவையில் முக்கியமான துறையை பெற்றார்.

(இதன் தொடர்ச்சி நாளை வெளிவரும்…)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved