🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்கனி பற்றி தெரிந்து கொள்வோம்!

ஜமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற ஜமதக்கினி, பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளின் தந்தையானார்.

 ரேணுகா தன் பதிபக்தியின் மேன்மையால், நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் பூஜைக்கு ஆற்று நீரை எடுத்து வருவாள். ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண்  பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு சில நொடிப் பொழுது வரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக்  களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் உடைந்தது. மீண்டும் மீண்டும் பச்சைக்களிமண்ணில் பானை செய்ய முயன்ற பொழுதும் பானை உடைந்து போனது. பூஜைக்கு தண்ணீர் கொண்டு வராமல் வெறும் கையோடு வந்தார்.

ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்தார். தன் கடைசி மகன் பரசுராமர்  முன்வந்து, தந்தையின் ஆணைப்படி தாயின் தலையைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டாக்குகிறேன் என்றார் சென்றார்.

தாய் ரேணுகா தேவி, பரசுராமா மகனே வேண்டாம் தாயைக் கொன்ற பாவத்திற்கு ஆளாக வேண்டாம். நானே என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டி நகர்ந்து ஒவ்வொறு இடமாக மறைந்துக்கொள்கிறாள். மகனும் பின் தொடர்ந்து தேடிக்கொண்டு வருகிறார். ரேணுகா ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள சென்றா போது, வெட்டியானின் மனைவி, ரேணுகாவை காப்பாற்றி தங்கள் வீட்டிற்கு அழைந்து சென்று பாதுக்காப்பு கொடுத்தனர். 

ரேணுகாவை கொல்ல வேண்டாம் என்று பரசுராமரை அந்த வெட்டியானின் மனைவி தடுத்தாள், அவளையும் தன் தாயையும் கையில் இருந்த கோடாரியால் வெட்டி தலையை துண்டாக்கினார். பின் தந்தையான ஜமதக்கினி முனிவரிடம் சென்று தந்தையே தங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். அன்புத் தாயையும் கொன்றேன் அவர்களை காப்பாற்ற வந்தவர்களையும் கொன்று விட்டேன் என்றார். ஜமதக்கினி முனிவர் தந்தை ஆணைக்கினங்க தாயின் தலையை சாய்த்து விட்டாய் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரசுராமர் தன் தாயையும், அவர்களை காப்பாற்ற வந்தவர்களையும் உயிர்பிழைக்கும் வேண்டும் என்று கேட்டார்.  

ஜமதக்கினி கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். துண்டிக்கப்பட்ட சிரங்களை, உடலுடன் இணைந்து உயிர் பெறச்செய் என்றார். அதன்படி பரசுராமர் தன் தாயின் உடலில், வெட்டியானின் மனைவி தலையும், வெட்டியானின் மனைவி உடலில் தன் தாயின் தலையும் மாற்றி பெறுத்தி உயிர் பிழைக்கசெய்து விட்டார். பரசுராமர் தவறு இழைத்துவிட்டேன் என்று தன் தந்தையிடம் முறையிட்டார். அதற்கு ஜமதக்கினி முனிவர் ஒன்று இணைந்த சிரங்களை ஒன்றும் செய்ய முடியாது. ரேணுகாவின் உடல் மாறிக்காரணத்தால் இனி மாரியம்மாள் என்று அழைக்கப்படுவாய் என்று கூறினார்.  


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved