🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராமநாயக்கனூர் மாளவ குலதெய்வ மஹாகும்பாபிஷேகம்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், இராமநாயக்கனூர் (நிச்சாம்பாளையம்) கிராமத்தில் எர்ர கொல்லவார் வகை மாளவ குலத்தினருக்கு சொந்தமான திருக்கோவில் திருக்குடமுழுக்குவிழா இன்று (21.08.2023)  காலை படுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் முழுவிவரம் வருமாறு,



ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பாய்ந்தோடி வரும் பவானி ஆற்றின் வலதுபுற கரையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் நிச்சாம்பாளையம். இராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் பெருமளவில் வாழும் இக்கிராமத்தில் எர்ர கொல்லவார் பிரிவில் மாளவ குலத்தினருக்கு பாத்தியப்பட்ட கோவில் இருந்துவருகிறது. அருள்மிகு கஞ்சம்மாள் - அருள்மிகு மாராத்தாள் ஆகிய திருநாமங்களைக்கொண்டு எழுந்தருளி பல நூற்றாண்டுகளாக மாளவ மக்களை  காத்துவருகிறது.


மேற்படி இத்திருகோவில் புணருத்தாரனம் செய்ய முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இராஜவிநாயகருக்கும் தனிசன்னதி அமைக்கப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும்  நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று (21.08.2023) திங்கள்கிழமை காலை ஸ்ரீ  இராஜவிநாயகர், ஸ்ரீ கஞ்சம்மாள், ஸ்ரீ மாராத்தாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் படுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் இராஜகம்பளத்தார் சமுதாய ஆண்களும், பெண்களும் நிச்சாம்பாளையம் வந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு குல தெய்வங்களின் அருள்பெற்றனர்.


முன்னதாக மஹாகும்பாபிஷேகத்தின் தொடக்க நிகழ்வாக கடந்த 08.08.2023 காவிரி நதியிலிருந்து கலசங்களில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இக்கோவில் திருப்பணிகள் தொடங்கி மஹாகும்பாபிஷேகம் வரை மாளவ குல சொந்தங்களின் ஒத்துழைப்போடு தலைமை நிர்வாகிகள் குறுப்ப நாட்டு நாயக்கர் ஆதீனம், சீமைபட்டக்காரர் B.C மார நாயக்கர்,  திருப்பூர் கவுண்ட நாயக்கன்பாளையம் K.S.கிருஷ்ணசாமி, குறுப்பநாட்டு சிறுவலூர் பட்டக்காரர் S.மூர்த்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved