🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாயன்மார்கள் வரலாறு!

இந்த உலகத்தில் நாம் இறைவனது பெருமைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அடியார்களின் சிறப்புக்களை தெரிந்துக்கொள்ள வேண்டும். அடியார்களின் பெருமையை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிவபெருமான் தன்னுடைய சாயரூப்பமாகிய சுந்தரமூர்த்தி நாயனாரை பூமிக்கு அனுப்புகின்றார். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். சுந்தரமூர்த்தியார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

நாயன்மார்கள் வரலாற்றை வாரம் ஒரு பகுதியாக தொடர்ந்து சிந்திக்க உள்ளோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved