🔴 LIVE | முப்பெரும் விழா 2023


குயவர் குலத்தில் பிறந்து சிவனடியாராகிய திருநீலகண்ட நாயனார் வரலாறு!

 சிதம்பரத்தில் குயவர் குலத்தில் அவதரித்தார். சிதம்பரம் நடராஜர் பொருமான் மீது அதிதமான ஆர்வம் கொண்டவர். அருகில் இருக்கக்கூடிய எல்லா சிவ ஸ்தலங்களுக்கும் சென்று வழிப்படக்கூடியவர். சிவ பக்தி மிகுந்தவர். இவர் இயற்பெயர் என்ன என்று ஒருவருக்கும் தொரியாமல் போனதற்கு காரணம் எப்போதுமே அவர் திருநீலகண்டம்... திருநீலகண்டம்... திருநீலகண்டம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

சிவ பொருமானுக்கு எத்தனையே நாமங்கள் இருந்தாலும் திருநீலகண்டம் என்று சொல்லுவதற்கு என்ன காரணம் என்றால், தேவர்களுக்கு எற்பட்ட ஆபத்தை போக்க வேண்டும் என்பதற்காக சிவ பொருமான் ஆலகால விஷத்தை தான் உண்டு தேவர்களுக்கு அமிர்த்தை கொடுத்ததனால் கிடைத்த பட்டம் திருநீலகண்டம். எப்போது யார் ஒருவர் அடுத்தவர் வாழவேண்டும் என்று நினைக்கின்ற மனம் வேண்டுமோ அவர்கள் சொல்லவேண்டிய நாமம் திருநீலகண்டம். இன்னோரு உயிர் நல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற போதே இறைவன் நம்மை நல்லா இருக்கனும் என்று ஆசிர்வாதம் செய்வார். 

திருமணமாகிறது இளமை காலம் அவர் இன்பத்துறையில் எளியராக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அவர் மனைவிக்கு தொரியவருகிறது. அவர் மனைவி கோபம் வந்து விசாரிக்கிறார். திருநீலகண்டரும் ஆம் என்று ஒப்புக்கொள்கிறார். நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று மனைவியிடம் மன்னிப்பும் கேட்கிறார்.  ஆனால் அவர் மனைவி அதித்த கோபத்தில் இருந்ததனால் ஒரே ஒரு வார்த்தை பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார். “தீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டுக் கூறினார். அன்று முதல் பிறர் அறியாமல் இருவரும் தனித்த இல்வாழ்க்கை நடத்தினர். இளமை கடந்து முதுமை அடைந்தனர். ஆயினும், இருவரும் அடியார் பணியில் சிறிதும் குறையாமல் வாழ்ந்துவந்தனர்.

திருநீலகண்டர் அன்றாடம் பானை செய்கின்ற போது முதலில் ஒரு திருவோடு செய்வார்.  அப்படி செய்கின்ற திருவோடுகள் அனைத்து சிவனடியார்களுக்குச் இலவசமாக அளிக்கும் திருப்பணியில் ஈடுபட்டு இருந்தார். சில வருடங்கள் போகின்றது. இருவரும் அப்படியே சத்தியத்தை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றார்கள். சில வருடம் பல வருடமாகின்றது இளமை காலம் முதுமை காலமும் ஆகின்றது.  

 திருநீலகண்டரது ஒழுக்கத்தின் மேன்மையை உலகறியச் செய்ய சிவபெருமான் ஒரு சிவயோகி வடிவத்தில் தோன்றினார். ஒரு திருவோட்டினை அவரிடத்தில் கொடுத்துத் "தாம் மீண்டும் கேட்கும்போது அதனைக் கொடுக்கவேண்டும்" என்று கட்டளையிட்டுச் சென்றார். சிவபெருமான் மாயையால் அத்திருவோடு மறைந்தது.

சிவயோகியார் பல நாட்கள் கழித்து மீண்டும் நாயனாரிடம் வந்து தமது திருவோட்டைக் கேட்டார். தாயனார் ஓட்டினை வைத்த இடத்தில் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாமையால் சிவயோகியாரை வந்து வணங்கி ஓடு காணாமல்போன செய்தியைக் கூறிப் புதிய ஒடு ஒன்று தருவதாகச் சொன்னார். 

சிவயோகியார் கோபம் கொண்டு, என் மண் ஓட்டினைத் தவிர வேறு பொன் ஓட்டினைக் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன். நீயே அந்த ஓட்டைத் திருடி இருக்கிறாய். நாங்கள் திருடவில்லை என்று இருவரும் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.  சரி நீங்கள் திருடவில்லை உண்மை தானே ஆமாம், அப்படியானால் நான் சொல்வது போல் சத்தியம் செய்து கொடுங்கள் என்று இருவரையும் ஊர் பொரியவர்கள் முன்னாடி நிற்க்கவைத்து. நடந்ததை சொல்கிறர்கள். ஐயா நீங்க சொல்றது உண்மை ஒற்றுக்கொள்கிறோம். ஆனால் திருநீலகண்டர் அப்படியானவர் அல்ல என்று ஊர்காரர்கள் சொல்கின்றனர். இவர் ஒரு சிவனடியார், சிவபக்தர் அன்றாடம் வருகின்ற அடியார்களுக்கு இவரே திருவோடு இலவசமாக கொடுக்கின்றார். அப்படி இருக்கையில் இவர் ஏன் உங்க ஒட்டை திருடபோகிறார் என்று ஒருவர் கேட்டார். இவர் திருடவில்லை என்று நாங்கள் சொல்கின்றோம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை, என்ன செய்தால் இவர்கள் திருடவில்லை என்று ஒப்புக்கொள்விர்கள். 

அதற்கு அவர்  நீ அதனை களவு செய்யவில்லையாயின் நீங்கள் இருவரும்  குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய வேண்டும் என்றார். திருநீலகண்டர், அவரது மனைவியும்  குளத்தில் ழூழ்கி சத்தியம் செய்ய போகிறார்கள். அப்போது சிவயோகியார் இருவரும் நான் செல்கின்ற மாதிரி சத்தியம் செய்யவேண்டும்.  இருவரும் ஒருத்தர் கையைப் பிடித்துக் கொண்டு குளத்திலே மூழ்கி ஓட்டினைத் திருடவில்லை என்று சத்தியம் செய்"என்றார். 

அவ்வாறே உடன்பட்டு இருவரும் மூங்கிலின் முனைகளைப் பிடித்துக்கொண்டு திருக்குளத்தில் மூழ்கி எழுந்தனர். மூழ்கியெழுந்த அளவில் இருவரும் முதுமைப் பருவம் நீங்கி இளமைப் பருவம் பெற்றனர். சிவயோகியாராக வந்த சிவபெரும மறைந்து உமாதேவியாரோடு காட்சியளித்து அவ்விருவரையும் நோக்கி "நீங்கள் இருவரும் பெற்ற இந்த இளமைப் பருவம் என்னும் நீங்காதவாறு எம்மிடத்தில் இருப்பீர்களாக" என்று திருவாது மலர்ந்து மறைந்தார் அவ்வாறே இருவரும் சிவலோகம் அடைத்து பேரின்பப் பெருவாழ்வை எய்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved