🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தீராத வினைதீர்க்கும் விநாயகனுக்கு பிரியமான 21!

விநாயகருக்கு பிரியமான 21:

மிகவும் எளிமையான கடவுள் பிள்ளையார். முழுமுதற்கடவுள், முதல் வணக்கத்துக்கு உரியவர், யானை முகமும் மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாய் அமைந்தவர். பிள்ளையாருக்கு படைக்கப்படும் இலை, பூ, அறுகம் புல், அதிரசம், அப்பம், கொழுகட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 எனும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

மலர்கள் 21:
புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம் பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

இலைகள் 21:
மாசி, கிளா இலை, வில்வம், அறுகு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, துளசி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

பழங்கள் 21:
கரும்பு, மாம்பழம், வேப்பம்பழம், அத்திப்பழம், அண்ணாச்சிபழம், கமலாப்பழம், சாத்துக்குடி, விளாம்பழம், பேரிக்காய், வாழைப்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சீதாப்பழம், சப்போட்டா, திராட்சை, கலாக்காய், நாவல்பழம், கொய்யாபழம், மாதுளை, இலந்தைப்பழம்.

அபிஷேகப் பொருட்கள் 21:
தண்ணீர், எண்ணைய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகாவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம் பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரகங்கள், இளநீர், சந்தனம், குங்குமம், திருநீறு, பன்னீர்.

நிவேதனப் பொருட்கள் 21:
மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினைமாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம். வினைதீர்க்கும் விநாயகரை வழிபடுவோம்! சித்தி விநாயகர் திருப்பாதம் போற்றி! போற்றி!

நன்றி:

திருமதி.விஜயலட்சுமி துரைசாமி,                                           
மேனேஜிங் பார்ட்னர்,
பெட்ரோ6 எஞ்சினியரிங் (பி) லிட்,
சென்னை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved