இல்லற வாழ்வில் இணையும் இளம் தம்பதியருக்கு வாழ்த்துகள்!

இன்று (18.11.2023) மாலை நடைபெறும் திருமண வரவேற்பில் ஆன்றோர்கள், சான்றோர்கள் நல்வாழ்த்துக்களோடு நாளை (19.11.2023) மங்கலநாண் அணிந்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு,
கோவை மாவட்டம் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் அவர்களின் சகோதரி மகளும், பொள்ளாச்சி வட்டம், குள்ளக்காபாளையம் மைனர் திரு.கே.வி.மோகன்ராஜ் - திருமதி.வனிதாமணி ஆகியோரின் அன்புமகள் எம்.சௌமியா B.Com., (CA), கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆர்.பொன்னாபுரம் தெய்வத்திரு.பி.சுப்புராஜ்-திருமதி.எஸ்.சுசீலா ஆகியோரின் அன்புமகன் எஸ்.பாலமுருகன் DPT., (Emirates Printing Press, L.L.C. Dubai) ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை பொள்ளாச்சி-கோவை சாலையிலுள்ள IMA ஹாலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.
அதேபோல், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், ஸ்ரீ கோகுல் ஸ்டோர் உரிமையாளருமான திரு.மாரிக்கண்ணன் அவர்களின் சகோதரர்கள் என்.மாரிப்பாண்டி - ஏ.அஸ்வினி மற்றும் என்.மாரீஸ்வரன் - பி.இந்துமலர் ஆகியோரது திருமணம் தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஸ்ரீ அழகர் திருமண மஹாலில் நாளை (19.11.2023) காலை நடைபெறவுள்ளது.
சங்க உறுப்பினர்கள் என்.மாரிப்பாண்டி, என்.மாரீஸ்வரன் ஆகியோரது திருமணத்திற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத்தலைவர் ஆர்.பெருமாள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சுந்தரராஜன், பி.தங்கம், டி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.