மூத்த வழக்கறிஞர் இல்லத் திருமண விழாவில் துரை வைகோ!
இராஜகம்பள சமுதாயத்தின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞரும், மதிமுக தலைமை தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு.B.பழனிச்சாமி இல்லத்திருமண வரவேற்பு விழா இன்று (24.11.2023) மாலை நடைபெறுகிறது. இதில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இதன் விவரம் வருமாறு,
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராக வீரபாண்டி ஆறுமுகம் பொறுப்பு வகித்தபோது அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளராக பொறுப்பு விகித்தவர் நாமக்கல் மூத்த வழக்கறிஞர் B.பழனிச்சாமி. 1993-இல் மதிமுக உதயமானவுடன் அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்கள் கட்சி, அமைப்பு வேறுபாடின்றி நட்பு வட்டாரத்தை வைத்திருப்பவர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனிக்கட்சி தொடங்கியதிலிருந்து அவரோடு பயணித்து, அவரின் நன்மதிப்பைப் பெற்றவர். இப்படி பல்வேறு பொதுப்பண்பு நலன்களையும், அனைவரின் அன்பையும் பெற்றுள்ள வழக்கறிஞர் திரு. டழனிச்சாமி - திருமதி.மணிமேகலை ஆகியோரின் பெயர்த்தியும், திரு.N.P.ரவி - திருமதி.மாதேஸ்வரி ஆகியோரின் அன்புமகள் P.R.குணவதி B.E., நாமக்கல் ஸ்ரீபாலாஜி மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு.R.முத்துச்சாமி - திருமதி.M.கோபிகா ஆகியோரின் அன்புமகன் M.பாலாஜி B.Sc., ஆகியோரின் திருமண வரவேற்பு இன்று (24.11.2023) மாலை நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலை பொம்மக்குட்டை மேட்டில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி திருமண மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவதற்காக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் நாமக்கல் வருகை தருகிறார். துரை வைகோவுக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். இது தவிர பல்வேறு கட்சித்தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
திருமண வரவேற்பு ஏற்பாடுகளை நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
இதேபோல், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.பவுல்ராஜ் - திருமதி. சண்முகலட்சுமி அன்புமகள் P.வினோதினி, நெல்லூர் திரு.சங்கரப்பாண்டி - திருமதி.முத்துமாரி ஆகியோரின் அன்புமகன் எஸ்.கோபால் ஆகியோரின் திருமண வரவேற்பு இன்று (24.11.2023) மாலை, சென்னை முகப்பேரில் அமைந்துள்ள செங்கை மீனாட்சி மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.