கவுன்சிலர் இல்லத் திருமணத்தில் தலைவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து!

விருதுநகர் நகரமன்ற 31வது வார்டு உறுப்பினரும், அதிமுகவின் விருதுநகர் நகர மீனவர் அணிச்செயலாளர் ஆர்.எஸ்.சரவணன் மற்றும் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.லட்சுமணராஜூ ஆகியோரது இல்லத் திருமண விழா நேற்று (19.11.2023) காலை நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சித் பிரமுகர்கள் கலந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதன் விவரம் பின்வருமாறு,
விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள S.R.P.திருமண மஹாலில் நேற்று (19.11.2023) காலை விருதுநகர் நகரமன்றத்தின் 31-வது வார்டு உறுப்பினரும், நகர மீனவர் அணிச்செயலாளர் ஆர்.எஸ்.சரவணன் அவர்களின் சகோதரரும், நகராட்சி ஒப்பந்ததாரரும், RSK அசோசியேட்ஸ் நிறுவன உரிமையாளருமான திரு.ஆர்.எஸ்.கண்ணன் - திருமதி கே.செல்வராணி அகியோரின் அன்புமகள் கே.ராகசுதா B.Tech., விருதுநகர் முத்துராமன்பட்டி ஊர்நாட்டாமை திரு.எஸ்.கிருஷ்ணசாமி - திருமதி கே.சங்கரேஸ்வரி ஆகியோரின் அன்புமகன் கே.சக்திவேல் M.E., (Senior Engineering Consultant, L&T infra Engineering Limited, Chennai) ஆகியோரது திருமணம் நடைபெற்றது.
இதில் எம்ஜிஆர் மன்ற தலைவர் கே.கலாநிதி, ஒன்றியச் செயலாளர் கே.கே.கண்ணன் உள்ளிட்ட அஇஅதிமுக வின் முன்னனி தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை ஆர்.எஸ்.சரவணன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
இதேபோல் மதுரை, கப்பலூர், மிராக்கில் A/c, திருமண மஹாலில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் எஸ்.இராமராஜு அவர்களின் சகோதரரும் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.எஸ்.இலட்சுமணராஜு - திருமதி இல.கஸ்தூரி ஆகியோரின் அன்புமகள் இல.யோகநிஷா B.E., மதுரை, கப்பலூர் திமுக பிரமுகர் தெய்வத்திரு மிசா ஆர்.குருசாமி நாயக்கர் மகன் திரு.ஜி.வரதராஜன் - திருமதி வி.மாரியம்மாள் ஆகியோரது அன்புமகன் வி.பிரபாகரன் B.E.,M.B.A., (Automation Engineer, TATA Electronics, Hosur) ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.
