🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வரலாற்று ஆய்வாளர் அய்யனார் காலமானார்.

காடல்குடி ஜமீன் வம்சாவளியைச் சேர்ந்தவரும்,  இசைமாமேதை நல்லப்ப சுவாமிகளின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான சிவகாசி அய்யனார் (55) அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் சிவகாசியிலுள்ள மருந்துவமனையில் காலமானார். 

சிறந்த வரலாற்று ஆய்வாளரான அய்யனார் நமது தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியத்தில் கம்பளப்பேரரசு முதல் கட்டபொம்மன் வரை என்ற கட்டுரையை வடித்துள்ளார். மாவீரன் கட்டபொம்மன் குறித்து சமூக வலைதளங்களில் விஷமிகளால் பரப்பப்படும் அவதூறுகளுக்கு தகுந்த ஆவணங்களோடு பதிலடி கொடுப்பதில் வல்லவரான அய்யனார், நாட்டிலுள்ள பல்வேறு ஆவணக்காப்பகங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தவர் இளம் வயதில் மரணமுற்றிருப்பது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். 

பல அமைப்புகள், தலைவர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களில் நட்பு, பகை, முரண் கொண்டிருந்தாலும் சமுதாயம் தாக்குதலுக்குள்ளாகும் பொழுது ஆபத்பாந்தனாக களமிறங்கி எதிரிகளை பந்தாடி வாயடைக்கச் செய்வதில் வல்லவர். எழுத்தாளர் தமிழவாணன் எழுதிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற புத்தகத்திற்கு தகுந்த ஆதாரங்களோடு பதிலளித்து மணிமேகலை பிரசுரம்  இனிவரும் காலங்களில் இப்புத்தகத்தை பதிவிடாது என்ற உறுதிமொழியையும், சரியான தகவல்களை திரட்டாமல் எழுதியதிற்காக வருத்தமும் தெரிவித்ததிற்கு  அய்யனார் எடுத்துக்கொண்ட முயற்சியே காரணமாகும்.

அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சென்னை வீ.க.பி.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved