🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பெரியார் வீட்டு இளம் கன்று பறிபோனதே! - கண்ணீர் அஞ்சலி.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மூத்த மகனும், சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் பெயரனும், பெரியார் வீட்டு வாரிசும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா (46) தீடீர் மரடைப்பால் காலமானார் என்ற செய்தி அரசியல் அரங்கில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியதோடு, அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவிலும் செயலாற்றி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட வந்தவரும், தமிழக அரசியலில் வளர்ந்து வரும் இளம் தலைவராக, அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம் கொண்ட திருமகன் ஈவெரா இழப்பு, தமிழக அரசியல் களத்திற்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.

திருமகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக களமிறங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். தொகுதி பணிகளிலும், சட்டசபை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக முதல்வர் அறிவித்தபோது சட்டசபையில் தனது கன்னி பேச்சின் மூலம் நன்றி தெரிவித்தார் திருமகன்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும் திருமகனின் மகளுமான சமணா கடந்த நவம்பர் மாதம் நடந்த குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று ஜூனியர் சாம்பியன் கோப்பையை பெற்றார். இதையடுத்து அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரை திருமகனும் சந்தித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் திருமகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இன்றைய தினம் மரணமடைந்தார். இதையடுத்து திருமகனின் உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இளம் தலைவர் திருமகன் ஈவெரா மறைவுக்கு கம்பளத்தார் சார்பில் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved