🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிரபல பின்னணி பாடகர் பாடும் நிலா S.P.B மறைவு - கம்பளத்தார் சமூகம் இரங்கல்

திரைஇசை பாடகரும், சிறந்த மனிதநேய பண்பாளருமான திரு.S.P.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தமிழகத்தில் வாழும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த திரு.S.P.B அவர்கள், முறைப்படி சங்கீதம் கற்றவர் இல்லை என்றபொழுதிலும், தன்குரல் வளத்தாலும், உச்சரிப்பாலும் சினிமாத்துறையில் வாய்ப்பை பெற்றார். ஆறுமுறை தேசிய விருதைப்பெற்றவரான திரு.S.P.B அவர்கள், மத்திய அரசின் பத்ம பூசன் உட்பட பல மாநில அரசுகளின் விருதுகளை பெற்றவர். தன் காந்தக்குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப்பாடி மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரானோ பெருந்தொற்று காரணமாக ஆகஸ்டு-5 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று, கொரானோ தொற்றிலிருந்து நலம்பெற்ற பொழுதிலும், நுரையீரல் சளிகாரணமாக மருத்துவ உபகரணங்கள் உதவியுடம் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை தேறிவந்த நிலையில், நேற்று  மாலை முதல் உடல்நிலையில் பின்னடைவச் சந்தித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் திரு.S.P.B.சரண், மதியம் 1.04 மணிக்கு திரு.S.P.B.யின் உயிர் பிரிந்ததாக அறிவித்தார்.

இசைஉலகில் தனக்கென லட்சக்கணக்கான இரசிகர்களை கொண்டுள்ள திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழ் காற்றுள்ள வரை கானங்களில் வாழ்ந்துகொண்டே இருக்கும். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினர்கள், இசை ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved