மக்களின் நீண்டநாள் கோரிக்கை!!! நிறைவேற்றிய கவுன்சிலர்! மகிழ்ச்சியில் மக்கள்!

மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சி, மாச்சேகவுண்டன் பாளையம் கிராமத்தில், விக்னேஸ்வரா கார்டன் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரதான சாலையை செப்பனிடக்கோரி நீண்டநாட்களாக வலியுறுத்தி வந்தும் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.மாசிலாமணி அவர்கள் தான் வெற்றிபெற்றால் முதல்பணியாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து விக்னேஸ்வரா கர்டனில் காங்கிரீட் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒன்றியக்குழு உறுப்பினர் தன் வாக்குறுதியை நிறைவேற்றியதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.