🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர் - திருச்செங்கோடு- திருமதி. ஜெயமணி முருகேசன்

திருமதி.ஜெயமணி முருகேசன் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பொட்லிபாளையம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி – திருமதி.சரோஜா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் திரு.முருகேசன் அவர்களை மணமுடித்துள்ளார்.


திரு.B.முருகேசன் அவர்கள் 07.02.1976-இல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள இராமநாதபுரம் கிராமத்தில் திரு.பொம்மநாயக்கர் – திருமதி. சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாப்பணிக்கு திரும்பினார். திரு.முருகேசன் - திருமதி.ஜெயமணி தம்பதியினருக்கு M.தீபக் என்ற மகனும், M.மோனிகா என்ற மகளும் உள்ளனர்.

திரு.முருகேசன் அவர்கள்  சிறுவயது முதலே திமுக-வில் அனுதாபியாக வளர்ந்தவர், தனது 18-ஆவது வயதில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு முதல் திமுக கிளைக்கழக செயலாளராக பணியாற்றிவரும் திரு.முருகேசன் அவர்கள் 2011-ஆம் ஆண்டு முதல் பள்ளிபாளையம் ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்கள், மறியல்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் திரு.முருகேசன் அவர்கள் தன் பகுதியில் கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்துச் செயலாற்றி வருகிறார். அதிமுக-மிகவும் வலுவாக உள்ள பகுதியாக இருந்தபோதிலும், இவர் பொறுப்பு வகிக்கும் வாக்குச்சாவடியில்  தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக-விற்கு அதிக வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து சாதனை படைத்து வருகிறார் திரு.முருகேசன்.

2006-ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்று வரும் திரு.முருகேசன் அவர்கள் , 2006-ஆம் ஆண்டு கொக்கராயன்பேட்டை ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2011-ஆம் ஆண்டு தேர்தலிலும் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், கொக்கராயன்பேட்டை ஊராட்சி மன்றத் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவி வகித்த காலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாடற்ற கிராமமாக மாற்றினார். மேலும் காங்கிரீட் சாலைகள், தெருவிளக்குகள்,  சாக்கடை வசதி, பொதுக்கழிப்பிட வசதி, இணைப்புச்சாலைகள் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 


2016-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் கொக்கராயன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தவர், மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் உரியமுறையில் நிறைவேற்றிக்கொடுத்தார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிபாளையம் ஒன்றியம், 16-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகழக வேட்பாளராக தன் துணைவியார் திருமதி.ஜெயமணி அவர்களை களமிறக்கி வெற்றிக்கனியை பறித்துள்ளார் திரு.முருகேசன் அவர்கள். திருமதி.ஜெயமணி முருகேசன் தம்பதியினர், இப்புதிய வாய்ப்பின் மூலம் சமூகத்தில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு சாதி,மதம்,மொழி,இன பாகுபாடின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved