🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர் கெ.நாகராஜன் எழுதும் விஞ்ஞானமும், மெய்ஞானமும் - தொடர் 33

விஞ்ஞானமும் மெய்ஞானமும் -பகுதி-33

அன்புச் சொந்தங்களே வணக்கம்! 

இந்த வாரம் முதலில் +2 மற்றும் 10 ஆம்  வகுப்புகளில் வெற்றி பெற்ற நமது சமுதாய மாணவ மாணவிகளுக்கு எனது பாராட்டுகளையும் மற்றும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில வாரங்களாக நாம் நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் எப்படி முறைப்படி இயக்கி ஆற்றலை நிலை நிறுத்திக் கொள்வது பற்றி அறிந்து கொண்டோம்.

விஞ்ஞானத்தின் மூலமாக எந்திரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி பார்ப்போம். விஞ்ஞானத்தின் மூலம் ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறுமே அன்றி ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. எனவே சைக்கிள் முதல் விமானம் வரை அனைத்தையும் இயக்குவது ஆற்றல் தான். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம், அதாவது ஒரு சைக்கிள் இயங்குவதற்கு மனித ஆற்றல் அதாவது எந்திர ஆற்றல் (Mechanical Energy) தேவை. வாகனங்கள் இயங்குவதற்கு வேதி ஆற்றல் ( Chemical Energy) தேவை. அது பெட்ரோலியம் மற்றும் டீசலில் இருந்து கிடைக்கிறது. விமானங்கள் இயங்க அடர்த்தி அதிகமாக உள்ள பெட்ரோல் அதாவது (White Petrol)  தேவை. இப்படி ஒவ்வொரு எந்திரமும் இயங்க ஒரு ஆற்றல் தேவை. நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆற்றல்கள் உருமாறி, உருமாறி இறுதியாக வெப்ப ஆற்றலாக மாறி இந்த புவியை அதிக வெப்பநிலை வேறுபாடுகளுக்கு உட்படுத்தகிறது.

விஞ்ஞானம் வளர்ச்சி கண்டு வரும் வேளையில் இயற்கை மாற்றங்கள் அதிகமாக மற்றும் வேகமாக அதிகரித்து மனித வாழ்க்கையில் மிக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது.

இதை சரி செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் மனித சமுதாயம் பின் வரும் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் தங்களின் சுகத்திற்காக இயற்கையை அழித்து வருகிறது. இதை கட்டுபடுத்த ஒரே வழி செயற்கை எந்திரங்களில் உருவாகும் வெப்ப ஆற்றலை  (Heat Energy) ஐ வெகுவாக குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அதாவது வாகனங்கள், தொழிற்சாலைகளில் வெப்பத்தை அதிகமாக உமிழும் இயந்திரங்கள், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, ஏர் கன்டிசனர், டிவி, கணினி என அனைத்திலும் வெப்பம் வெளியேற்றப்பட்டு புவியின் காற்று மண்டலத்தில் ஊடுருவல் செய்வதால் காற்று மண்டலம் வெப்பம் அடைந்து மீண்டும் சூரிய ஒளியில் அதிக வெப்பநிலைக்கு உந்தப்பட்டு பூமி பந்தை சூடாக்கி வாழ்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் மாற்றுகிறது. இதற்கு காரணம் ஆற்றல் நிலைகளை சீராக வைத்துக் கொள்ளாமல் இருப்பது தான். 

இந்த பிரபஞ்சம் முழுவதும் , நுண்துகள்களாலும் ஆற்றலாலும் ( Matter and Radiation ) நிரம்பி உள்ளது என்பதை De- Broglie  என்ற விஞ்ஞானி விளக்கியுள்ளார். 

சாதாரணமாக ஆற்றலை வெப்ப ஆற்றல் (Heat Energy), இயக்க ஆற்றல் (Kinetic Energy), நிலை ஆற்றல் (Potential Energy), ஒலி ஆற்றல் (Sound Energy), ஒளி ஆற்றல் (Light Energy), வேதி ஆற்றல் (Chemical Energy), கரு ஆற்றல் (Nuclear Energy) , காற்று ஆற்றல் (Wind Energy), அலை ஆற்றல் (Tidal Energy) ,  நீர் ஆற்றல் (Water Energy  or Hydral Energy) என வகைப்படுத்தலாம்.

இப்படி இந்த பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு ஆற்றல்களால் ஆனது அவற்றை நாம் அளவோடு பயன்படுத்தி நம்மையும் நம்மைச்சுற்றி உள்ள இயற்கையையும் பாதுகாத்து வாழ்வோமாக. 

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம். வாழ்க வளமோடு!

என்றும் அன்புடன் உங்கள்
முனைவர் கெ. நாகராஜன்,
இயற்பியல் பேராசிரியர்,
பூ.ச.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர் -14.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved