நி(கு)லநடுக்கம்! குற்றம் உனதல்ல... மருத்துவர்.ரமேஷ் வடித்த கவிதை!
நி(கு)ல நடுக்கம்
இயற்கை அன்னையே..
எதற்கு நீ சரிந்தாய்..?
அடுக்கும் மாடிகளால்
தடுக்கி விழுந்தாயோ?
பாரம் தாங்காமல்
ஓரம் சரிந்தாயோ?
எந்திரமயம் போக்க
மந்திரம் உரைத்தாயோ?
உயரும் வெட்பத்தினால்
துயரம் கொண்டாயோ?
முடங்கும் வனங்கள் கண்டு
நடுங்கிக் கலங்கினாயோ?
பிளாஷ்டிக் கழிவுகளால்
எலாஷ்டிக் இழந்தாயோ?
குற்றம் உனதல்ல...
உற்று நோக்கும் போது..!
சுற்றுச் சூழல் தனை
சற்றும் பேணா விட்டால்..
முற்றிலும் மூழ்கும் நேரம்
பற்றுகின்ற தூரத்தில்..!!!

மரு.ரா.ரமேஷ்,
வேலன் மருத்துவமனை,
திருப்பூர்.

