🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கந்தர்சஷ்டி சூரசம்ஹார ஸ்பெஷல்..

முருகப்பெருமான் அசுரரான சூரபத்மனை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக்  கொண்டாடுகின்றோம். சூரபத்மன்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற  மமகாரமாகவும் அமையப் பெற்றவன். 

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரதம் ஆகும்.  இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் (25.10.2022) தொடங்கி (30.10.2022) வரை இந்த நாளில் மேற்கொள்ளும் விரதத்தை கந்த சஷ்டி விரதம் என்று அழைப்பார்கள்.  சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்),  திருமண பாக்கியம் கை கூடும் என்பது நம்பிக்கை. கந்த சஷ்டி தினத்தன்று முருகன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.  

சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரத்திற்கு அடுத்த நாள் முருகன் வள்ளி, தேய்வவானை திருமண விமர்ச்சியாக கொண்டாப்படும். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved