75 ஆண்டுகளுக்குப்பின் ஐ.ஐ.டி யில் களம்புகும் இராஜகம்பளத்து இளஞ்சிங்கங்கள்!
உலக அளவில் பிரசித்திபெற்ற கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் சென்னை உட்பட பல நகரங்களில் உள்ள ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் மிகவும் முக்கியமானது. சுதந்திர இந்தியா 1947 இல் உதயமானபின் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்காக திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் வகையில், அறிவியலாளர்களையும், பொறியாளர்களையும் உருவாக்க ஐ.ஐ.டி க்கள் தொடங்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் அமைந்த முதல் அரசு ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் அமைந்தபின், முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கீழ், உலக தரத்தில் உருவாக்கப்பட்ட ஐ.ஐ.டி.க்கள், உயர்சாதியினருக்காக குறிப்பாக பிராமண சமுதாயத்தினருக்காகவே தொடங்கப்பட்டுள்ளது என்ற விமர்சனம் இன்றைய தேதிவரை உண்டு. எனினும் நாட்டின் முதன்மை கல்விநிறுவனமான ஐ.ஐ.டி.க்களில் சேரவேண்டும் என்பது, நாடுமுழுவதுமுள்ள மாணவ-மாணவியரின் முதன்மை விருப்பம் என்பதால், அங்கு சேர்வதற்கான போட்டி கடுமையானதாக இருக்கும்.
காலணியாதிக்கத்திற்கு முந்தைய ஆயிரமாண்டுகாலமாக இந்திய சமூக அரசியல் வரலாற்றில் கோலோட்சிய சமூகங்களில் கம்பளத்தார் சமூகம் புறக்கணிக்க முடியாதது. அப்படிப்பட்ட ஒரு சமூகம் சுதந்திரப் பிந்தைய இந்தியாவில் 40 லட்சம் பேர் உள்ளதாக சொல்லப்படும் ஒரு சமுதாயத்திலிருந்து ஐ.ஐ.டி க்களில் நுழைவுகின்ற தகுதியை ஓரிருவர் பெருவதற்கே 75 ஆண்டுகாலம் ஆகியிருப்பது, கம்பளத்தார் சமூகம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், நாம் பெருமையாகப் பேசுவதற்கும் எதார்த்த நிலைக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
2021 இல் தேனி மாவட்டம் வேலாயுதபுரம் (A.வாடிப்பட்டி) யைச் சேர்ந்த பொறியாளர் திரு.நாகராஜன்-திருமதி.ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புமகன் என்.ஹரிஹரசுதன் டெல்லியுலுள்ள ஐ.ஐ.டி யில் எஞ்சினீரிங் & கம்ப்யூடேஷனல் மெக்கானிக்ஸ் பிரிவில் சேர்ந்து தற்போது மூன்றாமாண்டு படித்து வருகிறார். அதேபோல் கடந்த ஆண்டு (2022) ஈரோடு மாவட்டம், மில்மேடு-காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதி ஆர்.ரவி - ஆர்.இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புமகன் ஆர்.கவின் பிரசாந்த் JEE தேர்வில் வென்று சென்னை ஐஐடியில் இயந்திரவியல் துறையில் சேர்ந்து படித்துவருகிறார்.
கவின் பிரசாந்த்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற்ற JEE தேர்வில் 98.9814 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 2731 வது இடம் பிடித்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரிலுள்ள ஐ.ஐ.டி யில் Bachelor Of Engineering Science (இளங்கலை பொறியியல் அறிவியல்) பிரிவில் சேர்ந்துள்ளார், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பங்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு.பி.ஜெயக்குமார் - திருமதி.சூசன் ஆகியோரின் அன்புமகன் ஜெ.சச்சின்.
பெற்றோர்களுடன் தற்போது மதுரையில் வசித்து வரும் ஜெ.சச்சினுக்கு ஜெ.ஸ்டெபி என்ற தங்கை உள்ளார். சச்சின் தன் பள்ளிப்படிப்பை மதுரையிலுள்ள குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியிலும், மேல்நிலை பள்ளிப்படிப்பை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் படித்தார். பட்டயப் பொறியாளரான ஜெயக்குமார் அவர்கள் EASYTECH என்ற பெயரில் CCTV கேமராக்கள் தயாரித்து விற்பனை செய்வதோடு மதுரை,கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்.
ஐஐடி க்களில் அரிதிலும் அரிதாக செல்லும் நிலைமாறி ஹரிஹரசுதன், சச்சின், கவின் பிராந்த் ஆகியோரை பின்தொடர்ந்து, ஆண்டுதோறும் பலர் சேரும் நிலை சமுதாயத்தில் உருவாக சச்சின் பெற்ற வெற்றி பள்ளியில் பயின்றுவரும் மாணவ - மாணவியருக்கு உந்துசக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. தம்பி சச்சின் சாதனைகள் தொடர சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
கீழே உள்ள படம் N.ஹரிஹரசுதன், ஐ.ஐ.டி.டெல்லி
R.கவின் பிரசாந்த் , ஐ.ஐ.டி, சென்னை.