🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கின்னஸ் சாதனைப் பெண்ணின் அரங்கேற்றம்!

சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தரராஜன் அவர்களின் மகள் வழி பெயர்த்தியும்,  ஆவடி பகுதியைச் சேர்ந்த திரு.தேவராஜ் - திருமதி.சிவகாமி அவர்களின் மகளான  ஜெயதர்ஷன்யா (19)-வின் நாட்டிய அரங்கேற்றம் இன்று மாலை நடைபெற்றது. 


ஜெயதர்ஷன்யா கொரட்டூர், பக்தவச்சலம் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டு சலங்கை நிருத்த நாட்டியபள்ளியில் இணைந்து பரதக்கலை பயின்ற ஜெயதர்ஷன்யா,  2018 ஆம் ஆண்டு சலங்கை பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 2018 டிசம்பரில் கேரளாவிலுள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் ஜெய்தர்ஷன்யா வின் நாட்டிய நிகழ்ச்சியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2019-ல் யுவா பியூஷன் நடனப்போட்டியில் பங்கேற்று 2-வது இடம் பெற்றார். 2020-இல் ஜெய்தர்ஷன்யா பங்கேற்ற பரதநாட்டியம் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றது.


 இதைதவிர பல பரதநாட்டிய மேடை நிகழ்ச்சியில் குச்சுப்புடி மற்றும் கரகம் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார். மாணவி ஜெய தர்ஷன்யா பள்ளி பயின்ற காலத்தில் CCA கோப்டனாகவு,ம் பள்ளி கேப்படனாகவும் இருந்த மாணவி ஜெய தர்ஷன்யாவிற்க்கு 'ராஜ்யபுரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. இன்று (10.09.2022) மாலை 6 மணிக்கு மேல் சென்னை, ஆவடிடிலுள்ள ஜவ்ஹாரி ஹால், ஜெய தர்ஷன்யாவின் அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெய்தர்ஷன்யா விற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved