உழைப்பால் உயர்ந்த உத்தமர் -தொழிலதிபர்- பெருந்துறை.திரு.P.கண்ணுசாமி
திரு.P.கண்ணுசாமி.B.Com., அவர்கள் 24.01.1977-ல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சீனபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.மாரக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். திரு.கண்ணுசாமி அவர்கள் ஈரோட்டில் புகழ்பெற்ற சிக்கையா நாயக்கர் (CNC) கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை (B.Com) பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.கோகிலா என்ற மனைவியும் K.கவிநிகா என்ற மகளும் K.ஸ்ரீநிசாந்த் என்ற மகனும் உள்ளனர்.
1997-ல் கல்லூரி படிப்பை முடித்த திரு.கண்ணுசாமி அவர்கள் நேரடியாக தொழில்துறையில் கால்பதித்தார். இவரின் தகப்பனார் திரு.பழனிச்சாமி அவர்கள், விவசாயத்துடன் கொப்பரை தேங்காய் நேரடி கொள்முதல் செய்து தேங்காய் பருப்பு உடைக்கும் தொழிலும் சிறிய அளவில் மேற்கொண்டு வந்தார். கல்லூரி படிப்பை முடித்து வந்த திரு.கண்ணுசாமி அவர்கள், இத்தொழிலை மேலும் நவீன மயமாக்கி, விரிவுபடுத்தினார்.தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற முதுமொழிக்கேற்ப, தனது இளைய சகோதரர் திரு.P.பழனிச்சாமி அவர்களையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டவர், தன் சொந்த கிராமமான சீனபுரத்திலேயே ஸ்ரீ மகாலட்சுமி ஆயில் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தொழில்சாலை அமைத்து, நவீன இயந்திரங்களைக் கொண்டு, தேங்காய் பருப்பு உடைக்கும் தொழிலின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, அத்தொழிலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்சென்றார். நவீன ஆலையின் மூலம் உற்பத்தித் திறன் மேம்படுத்தியவர், அதற்குத் தேவையான மூலப்பொருளை தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளிலுள்ள விற்பனையாளர்களிடமிருந்து நேரடி கொள்முதல் செய்வதுடன், இங்கு தயாரிக்கப்பட்ட தேங்காய் பருப்புகளை நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்தும் வருகிறார். அவ்வப்போது சந்தை சூழலுக்கேற்ப தேவைப்படும் பட்சத்தில் ஏற்றுமதி செய்யவும், அனைத்துவகையான உணவு எண்ணெய்களை (Vegetable Oils) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, டீலர்கள் மூலம் நாடுமுழுவதும் விற்பனை செய்யவும் ஸ்ரீமகாலட்சுமி டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
மேலும் அதேதொழில் சார்ந்த துறைகளில் தன் சாம்ராஜியத்தை விரிவுபடுத்த விரும்பியவர், ஸ்ரீ மகாலட்சுமி ஆயில் ரிஃபைனரீஸ் என்ற பெயரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியுள்ளார், இங்கு தயாரிக்கப்படும் சமையல் எண்ணையை உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறார். தான் தொழில்துறையில் அடியெடுத்துவைத்த காலத்திலிருந்து ஒவ்வொரு மூன்று அல்லது நான்காண்டுகளுக்குள் புதிய தொழில்முயற்கிகளில் ஈடுபடுவதை லட்சியமாகக் கொண்டு, திட்டமிட்டு செயலாற்றி வருபவர், தன் அடுத்த முயற்சியாக மோட்டார் வாகனத்துறையிலும் கால்பதித்தார். அதற்காக ஸ்ரீமகாலட்சுமி டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி நல்லமுறையில் நடத்தி வருகிறார். அந்த வகையில் தனது அடுத்த முயற்சியாக பெட்ரோலிய விற்பனையகத்திற்கு அனுமதி பெற்றுள்ளவர், விரைவில் ஸ்ரீமகாலட்சுமி ஏஜென்சீஸ் என்ற பெயரில் அடுத்த பாய்ச்ச்லுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தொழில் சாம்ராஜியத்தை நிலைநிறுத்த இரவு-பகல் கண் துண்ஞ்சாமல் கடுமையாக உழைப்பவர், உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவ்வளவு கடுமையான பணிச்சுமைகளுக்கும் மத்தியிலும் தான் சமுதாயத்தின் மீது பற்றும்,பேரன்பும் கொண்டவர் திரு.கண்ணுசாமி அவர்கள். சமுதாயத்தின் நிலை கண்டு மிகுந்த வருத்தம் கொள்பவர், அம்மக்களின் தரத்தை மேம்படுத்த தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமுதாய முன்னேற்ற இயக்கமான விடுதலைக் களம் அமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர், சமுதாயம் அரசியல் விழிப்புணர்வைப்பெற வேண்டும் என்ற நோக்கில் ஈரோடு மாவட்டம் , பெருந்துறை அருகே 2018-ல் விடுதலைக்களம் சார்பில், இவர் முன்னின்று ஏற்பாடு செய்து, பிரமாண்ட மாநாடு நடத்தி அனைத்துக் கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தார். தனது வருவாயில் குறிப்பிட்ட பங்கை சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு செலவிடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை லட்சியமாக் கொண்டு, அதை தன்வாழ்நாளில் கடைபிடித்து வரும் திரு.கண்ணுசாமி அவர்கள் கம்பளத்தாரில் ஒரு அதிசயம் என்றால் மிகையல்ல.
கேட்டதைக் கொடுக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தன்னால் முடிந்ததைக்கூட கொடுத்து உதவ முன்வராமல், தங்களை தாங்களாகவே பெரிய மனிதர்களாக எண்ணிக்கொள்ளும் நம் சமுதாயத்தில், பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் நமது சமுதாயத்தினர் வசிக்கும் கிராமங்களானாலும் அல்லது பிற சமுதாயத்தினர் வசிக்கும் கிராமத்திலிருந்து வந்தாலும், தன்னால் இயன்றதை செய்திடும் ஈகையாளர் திரு.கண்ணுசாமி அவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவரின் பங்களிப்பில்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் எந்த திருவிழாவும், அன்னதானமும், கோவில் கும்பாபிஷேகமும் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்ற அளவில் தயாள குணம் படைத்தவர். அதனால் தான் என்னவோ இவரின் நிறுவனங்கள் அனைத்திற்கும் ஸ்ரீ மகாலட்சுமி என்ற பெயர் இயல்பிலேயே அமைந்துவிட்டது போலும். இப்பொழுதும் கூட தன் பிறந்த கிராமமான சீனபுரத்தில் எழுந்தருளியுள்ள புகழ்பெற்ற ஸ்ரீவிஜயபுரி வேலாயுதசாமி கோவில் முக்கிய காரியதர்சிகளில் ஒருவராக இருக்கும் திரு,கண்ணுசாமி அவர்கள், தற்பொழுது சுமார் 10 கோடி மதிப்பீட்டில் அக்கோயிலை புதுப்பிக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மிகத்திலும் தன்முத்திரையை நிலைநாட்டியுள்ளார்.
வருடம் தோறும் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை சுற்றுவட்டார கிராமங்களில் சிறப்புடன் கொண்டாடி, ஏழை-எளியோருக்கும், மாணவ-மாணவியருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.சமீபத்தில் கூட சுற்றுவட்டார கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, விடுதலைக்களத்தின் கொடியினை பட்டொளி வீசிப்பறக்க செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடின உழைப்பாளியாக, வெற்றிகரமான தொழிலதிபராக, சிறந்த சமுதாயப் பற்றாளராக, பரந்து விரிந்த மனமுடையவராக, அனைவரையும் அரவணைக்கும் பண்புடையவராக, வாரி வழங்கும் வள்ளலாக, பன்முகத்தன்மையுடைய திரு.கண்ணுசாமி அவர்கள் மேலும், மேலும் உயருவார் என்பதில் ஐய்யமேதுமில்லை. அவரின் ஒவ்வொரு வெற்றியும் சமுதாயத்தின் வெற்றியாக பார்க்கப்படும். திரு.கண்ணுசாமி அவர்கள் ஸ்ரீ மகாலட்சுமி பெயரில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு புதிய முயற்சியிலும் வெற்றிபெற கம்பளத்தார் குலம் காக்கும் வீரசக்கதேவி அருள்புரிய வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.