🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைப்பால் உயர்ந்த உத்தமர் - தொழிலதிபர்.திருப்பூர்.R.முருகன்.

திரு.R.முருகன் அவர்கள் 08.04.1971 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள வலுக்குலொட்டி கிராமத்தில் திரு.ரூபாய்முத்து நாயக்கர்திருமதி.அலமேலு லட்சுமியம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். இவர் தொடக்க கல்வியை வலுக்குலொட்டியிலும், உயர்நிலைப்பள்ளி படிப்பை பாலவநத்தத்திலும் முடித்தார். அதன் பின் விருதுநகரிலுள்ள அரசினர் தொழில்பயிற்சிக் கல்லூரியில் ITI Electrical துறையில் பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி. M.சுமதி என்ற மனைவியும் M.வைஷாலி B.Tech, M.சாருமதி.B.Com.,(C.A) என்கிற இருமகளும் உள்ளனர்


திரு.R.முருகன் அவர்கள் தனது பட்டயப்படிப்பை முடித்துவிட்டு ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் அப்பரன்டீஸ் ட்ரெயினியாகபயிற்சி பெற்றார். 1989-இல் குடும்பத்தாருடன் ஊட்டி சுற்றுலாவிற்க்கு செல்லும் வழியில், ஈரோட்டிலுள்ள தனது உறவினாரான மாமாவின் வீட்டிற்கு செல்கின்றார். டெக்ஸ்டைல்ஸ் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த மாமாவின் பேச்சின் மூலம் Screen Designing மீது திரு.முருகன் அவர்களுக்கு ஆர்வம் உண்டாயிற்று. சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் ஈரோடு திரும்பியவர், Screen Designing-பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். ஆறு மாதகால பயிற்சிக்குப்பின் திருப்பூர் சென்ற திரு.முருகன் அவர்கள் Everwin Exports என்ற நிறுவனத்தில் Designer ஆக பணியாற்றத் தொடங்கினார். Designing துறையில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக, அதுபற்றி மேலும் கற்றுக்கொள்ள 1991 ஆம் ஆண்டு தூத்துக்குடியிலுள்ள தனியார் பயிற்சிமையத்தில் இணைந்து ஆறுமாதகாலம் Free Hand Drawing பயின்றார். அதிலும் திருப்தியடையாத திரு.முருகன் அவர்கள், 1992 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் இணைந்து Painting Designing பயிற்சி பெறுகிறார். 1993 ஆம் ஆண்டு மதுரையில் ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்றவர், 1994 ஆம் ஆண்டு கோவையிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து Geometrical Engineering பயின்றார். தொழில்நுட்பத்தில் திரு.முருகன் அவர்களின் திறமைக்கு சான்றாக இருந்தது, தொடர்ந்து மூன்றாண்டுகாலம் பல்வேறுதுறை சம்மந்தமாக பயின்றபோதிலும், Everwin Export நிறுவனம், திரு.முருகன் அவர்களை பணியிலிருந்து விடுவிக்காமல், தேவைப்படும்பொழுது விடுமுறை மட்டும் அளித்து தங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டது என்பதே.

திரு.முருகனின் திறமையை Everwin Export-க்கு அடுத்து அறிந்து கொண்டது, அவரின் துணைவியார் திருமதி.சுமதி அவர்கள். 1996-இல் திரு.முருகனை கரம்பற்றியகையுடன், கணவர் Designing துறையில் கைதேர்ந்தவர் என்பதை உடனடியாக உணர்ந்துகொண்டார். கைநிறைய சம்பளம், நிர்வாகம் கொடுத்த மரியாதை, இதே திருப்தியுடன் மாதசம்பளத்தில் காலத்தைக் கடத்திவிடலாம் என்று திரு.முருகன் நினைத்துக்கொண்டிருக்க, கணவரை சுயதொழிலில் இறக்கிவிடும் முயற்சியை திருமதி.சுமதி மேற்கொண்டுவந்தார். மனைவியின் ஆலோசனையையும், விருப்பத்தையும் ஏற்றுக்கொண்டு 1998-இல் Angel Computer Designing Centre என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆறு ஆண்டுகால கடின உழைப்பின் பயனாக, தன்னை தொழிலதிபராக்கிய அன்புத் துணைவியாரின் பெயரில் திருப்பூர் மாநகரில் சொந்தமாக வீடு கட்டி 2005-இல் குடியமர்ந்தார். மேலும் 2006-இல் Angel Screen Printing என்ற நிறுவனத்தையும் கூடுதலாக துவங்கி நடத்தி வரும் திரு.முருகன், 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்தும், 2018 போர்ச்சுகல் நாட்டிலிருந்து கணினிமயமாக்கப்பட்ட நவீன பிரிண்டிங்க் மெசின்களை இறக்குமதி செய்து , தொடர்ந்து தனது நிறுவனத்தை விரிவு படுத்தி வருகிறார்.

இது மட்டுமல்லாது, 2004 ஆம் ஆண்டு Screen Making Association என்ற அமைப்பை முதன்முதலாக திருப்பூரில் தோற்றுவித்தார். இதுதவிர 2008 ஆம் ஆண்டு முதல் Lion Club Of Tirupur Meluin Jones உறுப்பினராக உள்ள திரு.முருகன் அவர்கள், 2012-முதல் Tirupur Exports Printing Association (TEPA) –இல் எக்சிகியூட்டிவ் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் மற்றும் தொழில் சார்ந்த அசோசயன்களில் முழு ஈடுபாடு காட்டும் திரு.R.முருகன் அவர்கள், சமுதாயப்பணியிலும் அதிக ஈடுபாடு உடையவர். .வீ..பண்பாட்டுக்கழக நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர், நிதி திரட்டும் நோக்கில் திருப்பூர் வரும் பல்வேறு சமுதாய அமைப்புகளுக்கு வேடந்தாங்கலாக இருப்பவர் திரு.முருகன். அந்த வகையில் பல்வேறு அமைப்புகளுக்கு நிதிதிரட்ட உதவியுள்ளவர், சென்னை, வீ..பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி வழங்கியசில்வர் கிளப்உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.முருகன் அவர்கள் மேலும் பலபுதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்று, தொழில்துறையில் கம்பளத்தாரின் அடையாளமாக, வலுவான அடித்தளம் அமைக்க வேண்டி, அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved