உழைப்பால் உயர்ந்த உத்தமர் - ஊத்துக்குளி - திரு.M.துரைசாமி
திரு.M.துரைசாமி அவர்கள் 14.06.1980-இல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கிராமத்தில் திரு.மாரா நாயக்கர் – திருமதி.மாரம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் ஈரோட்டில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் வர்த்தக மேலாண்மைதுறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.இவருக்கு திருமணமாகி திருமதி.D.திவ்ய பாரதி என்ற மனைவியும் D.தேனுஜா என்ற மகளும் D.ஹேமந்த் மாரையா என்ற மகனும் உள்ளனர்.
தனது கல்லூரி படிப்பிற்குப்பின் பங்குவர்த்தகத்தில் நுழைந்த திரு.துரைசாமி அவர்கள் பங்கு வர்த்தக ஆலோசகராக 10 வருடங்கள் பணியாற்றிவந்த நிலையில், சுயதொழிலில் ஆர்வம் ஏற்படவே சொந்த ஊரான ஊத்துக்குளியில் Butter Man Trading என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக வெண்ணை மற்றும் நெய் தயாரித்து உள்ளூர் சந்தையிலும், சர்வதேச சந்தையிலும் விற்பனைசெய்து வருகிறார். மேலும் இதே காலகட்டத்தில் Real Estate நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருவதுடன், 2019 முதல் கோவையில் Ooffero Technology Ecommerce என்ற மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதுதவிர Capprofx Forex Trading Company நிறுவனத்தில் தலைமை அதிகாரியாகவும் ஏழு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார்.
மிகுந்த சமுதாய பற்றுக்கொண்டவரான திரு.துரைசாமி அவர்கள், சமுதாய அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்வதுடன், இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் ஆண்டு தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளன்று திருப்பூரிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருவது வழக்கம்.
தொழில்துறையில் வளர்ந்துவரும் இளம் தொழிலதிபரான திரு.துரைசாமி அவர்கள் மேன்மேலும் பல வெற்றிகளைப்பெற்று, தொழில்துறையில் கால்பதிக்கும் வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டகவும், உந்துசக்தியாகவும் இருக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.