🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைப்பால் உயர்ந்த உத்தமர் - பொள்ளாச்சி - திரு.T.ஜனகராஜ்.

திரு.T.ஜனகராஜ் அவர்கள் 24.01.1982-இல் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், குள்ளக்காபாளையம் கிராமத்தில் திரு.தங்கவேல் நாயக்கர் – திருமதி.சரோஜினி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் சர்வதேச வணிகத்துறையில் (MIB) முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.J.ராதா என்ற மனைவியும் J.அனன்யா, J.அகத்தியா என்று இரு மகள்கள் உள்ளனர். 


கோவையில் தனது கல்லூரி படிப்பை முடித்த திரு.ஜனகராஜ் அவர்கள் சென்னையிலுள்ள Red Eagle Shipping Pvt Ltd என்ற நிறுவனத்தில் நான்கு வருடங்கள் பணியாற்றினார். திருமணத்திற்கு பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்பிய திரு.ஜனகராஜ் அவர்கள், பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாலராக மூன்று வருடங்களாக பணியாற்றி வந்தார். சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற நோக்கில் 2010 ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தென்னை நார் கழிவு உற்பத்தி தொழிலை தொடங்கி நடத்தி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு   ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ANANYA COIRS என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  அதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு நவீனப்படுத்தப்பட்ட (காயர் பித் பிளாக் யூனிட்) இயந்திரத்தைக்கொண்டு காயர் பித் பிளாக் (COCO PEAT) உற்பத்தி செய்து உள்நாட்டிலும் கொரியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். 


தொழிலை தொடர்ந்து சமுதாய பணியிலும் ஆர்வம் கொண்ட திரு,ஜனகராஜ் அவர்கள் மாவீரன் பிறந்தநாளன்று சமுதாய மக்கள அனைவரும் ஒன்று சேர்ந்து ஈச்சனாரியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செய்து வருகிறார்.

தொழில்துறையில் வளர்ந்துவரும் இளம் தொழிலதிபரான திரு.ஜனகராஜ் அவர்கள் மேன்மேலும் பல வெற்றிகளைப்பெற்று, தொழில்துறையில் கால்பதிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு முன்மாதிரியாக இருந்து ஊக்கப்படுத்துவதுடன், மேலும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு புகழ் சேர்த்திட அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.   

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved