🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய-சமூக சேவகர்கள் கோவை.திரு.சி.முத்துசாமி.B.A.,B.L.,

திரு.சி.முத்துசாமி.B.A.,B.L., அவர்கள் 16.03.1959-ல் கோயம்புத்தூர் அருகேயுள்ள  ஈச்சனாரியில் திரு.சின்னசாமி திருமதி. ராஜம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் ஈச்சனாரியில் “ஊர் நாயக்கர்” குடும்பத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோயில் நிர்வாகிகளாக இவரின் தகப்பனார் திரு.சின்னசாமி அவர்கள் பொறுப்பு வகித்துள்ளார். பள்ளிப்படிப்பை கோவை அருகேயுள்ள மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தவர், கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் கோவை அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றவர், சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக 1984-ஆம் ஆண்டு பதிவு செய்தார். திரு.சி.முத்துசாமி அவர்களுக்கு திருமதி.தனலட்சுமி என்ற மனைவியும் M.சரண்யன்.B.E., என்ற மகனும் M.ஸ்ரீவத்சலா.B.Sc (Viscom) என்ற மகளும் உள்ளனர்.


பல்வேறு வணிகம் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்கும் திரு.சி.முத்துசாமி அவர்கள், விவசாயம், PVC Pipe தயாரிக்கும் தொழிற்சாலை,Property Developer என பல்வேறு துறைகளில் தடம்பதித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறார். சமூகப்பணியிலும், பொதுநல சேவையிலும் அதிக அக்கறை கொண்டவர், 2004 ஆம் ஆண்டு முதல் ரோட்டரி கிளப்பில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். 2008-2009 ல் ரோட்டரி கிளப்பில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2010-ல் Rotary Club Of Chennai Port City என்ற கிளப்பை துவக்கி பட்டயத் தலைவராக (Charter President) பொறுப்புவகித்தார். ரோட்டரி கிளப் நடத்தும் பல்வேறு சமூகநலப்பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவரை, 2012-13-ல் நந்தவனம் (Nandavanam) என்ற திட்ட மாவட்ட மாநாட்டு செயலாளராகவும் (District Conference Secretary), Happy Village Project-ல் இணைத்தலைவராகவும் (Associate Chairman) நியமிக்கப்பட்டார். இதே ஆண்டில் (2012-13) Rotary Club Of Nolambur- ஆளுநரின் சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றியவர், 2013-14 ஆம் ஆண்டில் ஜெய் ஹோ (Jai Ho) திட்டத்தின் தலைவராக திரு.முத்துசாமி அவர்கள் பொறுப்பு வகித்தபொழுது, தமிழ் நாடு அரசு பள்ளிகளில் 10-12 ம் வகுப்பு பயிலும்  பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய 16000 மாணவர்களுக்கு உதவித் தொகை 2 கோடி வழங்கப்பட்டது. மைக்ரோ கிரெடிட் திட்டத்தின் தலைவராகவும்  பொறுப்பு வகித்தார். அதேபிரிவில் 2014- 15 ல் உதவி ஆளுநராகவும் (Assistant Governor), 2015-ல் கூடுதல் தலைவராகவும் (Associate Chairman) பணியாற்றினார். 2014-ல் என் கொடி – என் இந்தியா ( My Flag – My India) குழு உறுப்பினராகவும், 2015-ல் என் சுடர்- என் உத்வேகம் (My Flame – My Inspiration) நகரத் தலைவராகவும் பணியாற்றினார். 2015-16-ல் Rotary சங்க  தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் தலைவராகவும், 2016-17ல் திட்டங்கள், ஏஜி நிர்வாகம் என பல்வேறு பொறுப்புகளை வைத்தவர், சென்னை போர்ட் சிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும் (Managing Trustee- Club Of Chennai Port City Charitable Trust) பணியாற்றினார். மேலும் 2018-19ல் ரோட்டரி அறக்கட்டளை தலைவராகவும்,  2019-20 ல் மாவட்ட போலியோ பிளஸ் தலைவராகவும் தொடர்கிறார்.


திரு.சி.முத்துசாமி அவர்களின் சமூகப்பணியை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2009-10 ல் சிறந்த ரோட்டரி செயலாளர் விருதும்,  2011-12-ல் சிறந்த ரோட்டரி  தலைவர்  விருதும் வென்றுள்ளார். இவரது பதவிகாலத்தில் Happy Village Project- 2012-13 ல் (RI.Dist 32320) 120 கிராமங்களைத்  தத்தெடுத்து வெற்றிகரமாக திட்டங்களை செயல்படுத்தினார். இன்ட்ராக்ட் தலைவராக 2016-17 களில்,  67 இன்ட்ராகட் கிளப் பள்ளிகளில் தொடங்கியதில் (Interact Club) முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், இந்த கிளப்களை ஒருங்கிணைத்து Charter for the City and City Plus interact Clubs ஐ பெற்றார்.தற்பொழுது ரோட்டரி பவுண்டேசனின் 2 ஆம் புரவலர் பங்களிப்பான 18000 அமெரிக்க டாலர் ( இந்திய ரூபாயில் 13.0 லட்சம்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.        இதுதவிர சென்னையில் புகழ்பெற்ற  Cosmopolitan Club, Andhra Club, YMCA ஆகியவற்றில் உறுப்பினராகவும், சென்னை, தி.நகர் ஜுவா பார்க் தலைவராக-2015 பொறுப்பு வகித்துள்ளார்.


சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வமுடையவர், இந்தியாவில் பெரும்பாலான சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகப்பணியினூடே சமுதாய பணிக்கும் ஊக்கமளிப்பவர், சென்னை வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிடப்பணிக்காக 2008 ஆண்டில் முதன்முதலாக தனிநபர் நன்கொடையாக ரூ.ஐம்பதாயிரம் வழங்கிய பெருமகனார் என்பது மிகவும் போற்றுதலுக்குறியது. தொடர்ந்து சங்கத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பவர்,  அனைத்து முக்கிய கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு நிர்வாகத்திற்கு ஊக்கமளிப்பவர்.  பல்வேறு சிறப்புகளையும், பொறுப்புகளையும் பெற்றுள்ள திரு.முத்துசாமி அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்து, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved