வளரும் இளம் சமுதாய தலைவர் - தாந்தோன்றிமலை - திரு.M.R.விஜயகுமார்
திரு.M.R.விஜயகுமார் அவர்கள் 10.06.1980-ல் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருகேயுள்ள அப்பிபாளையம்-கொக்கம்பட்டி கிராமத்தில் திரு.M.ராஜு – திருமதி.அம்சவள்ளி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் உயர்நிலைப் பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.லோகம்மாள் என்ற மனைவியும், V.L.நவீனா, V.L.ஜெயஸ்ரீ என்ற இருமகள்களும் உள்ளனர்.
பள்ளிக்கல்விக்குப்பின் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். இதன்மூலம் தொழிற்சங்க அறிமுகத்தைப்பெற்றவர் 2010 முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, நல்லூர் பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்தார். அதன்பின் கரூர் திரும்பியவர் 2017 முதல் கரூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருபவர், நீண்ட காலமாக மொத்த விலையில் மளிகைபொருட்களை கரூர், திருச்சி மாவட்டங்களில் விற்பனை செய்து வருகிறார்.
அன்னதானப்பணிகளுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகிறார். வைரம்மாள் திருமண தகவல் மையம் என்ற பெயரில் வரன் தேடுபவர்களுக்கு உதவி வரும் திரு.விஜயகுமார் அவர்கள், மேலும் தன் சேவையை செம்மைப்படுத்த “கேடயம்” என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் சமுதாய எழை-எளிய மாணவ-மாணவியற்கு கல்வி உதவி தொகை, முதியோருக்கு நலதிட்ட உதவிகள், மரகன்று நடுதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும், தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNT என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க கோரியும், இடஒதுக்கீடு வழங்கவும் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மேலும், அரவக்குறிச்சி சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் கம்பளத்தார் சமுதாய மக்களுக்கு DNT விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தவிர,ஆண்டுதோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளன்று மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமுதாயப்பணிகளில் மேலும் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு, இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி கம்பளத்தார்களுக்கு அர்சியல் எழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் முன்னேற்றக் கழகம் தொடங்கியவர்களில் ஒருவரான திரு.விஜயகுமார் அவர்கள், அதன் மாநில துணைச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சமுதாயத்தில் வளர்ந்துவரும் இளம் தலைவர்களில் ஒருவரான திரு.விஜயகுமார் அவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.