சமுதாய தியாகிகள் - ஜி.தும்மலப்பட்டி - திரு.பெருமாள் நாயக்கர்
அமரர்.திரு.பெருமாள் நாயக்கர் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஜி.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள். இராஜ கம்பளம் மகாஜன சங்கத்தின் துணை தலைவராக தன் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ததுடன்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார். காங்கிரஸ் பேரியக்கத்தில் நிலக்கோட்டை ஜில்லா போர்டு பிரசிடென்ட்டாக பதவி வைத்தவர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்ககோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்திக்காட்டியவர்.