🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றிய துணைப்பெருந்தலைவர் : இராசிபுரம் - திருமதி.சந்திரா சிவக்குமார்

திருமதி.சந்திரா சிவக்குமார் அவர்கள் 05.04.1980-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், P.S. புரம் அருகேயுள்ள பெரியூரில் திரு.ரங்கம நாயக்கர் – திருமதி. மசலம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முடித்தவர் திரு.R.சிவக்குமார் அவர்களை மணமுடித்துள்ளார்.

திரு.சிவக்குமார் அவர்கள் 29.07.1977-இல் இராசிபுரம் அருகேயுள்ள தொட்டியபட்டியில் திரு.P.ராஜு நாயக்கர் – திருமதி.சோராயம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளிவரை கல்வி பயின்றவர், பின்னர் தந்தைக்கு உதவியாகப் பணியாற்றினார். திரு.சிவக்குமார் - திருமதி.சந்திரா தம்பதியினருக்கு S.ஹரிஹரன் என்ற மகனும், S.காவியஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.


திரு.சிவக்குமார் அவர்களின் தந்தையார் திரு.ராஜ் நாயக்கர் அவர்கள் தமிழ்நாடு இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவராக பொறுப்புவகித்து, மிகச் சிறப்பான முறையில் பணியாற்றியவர். நாமக்கல் மாவட்டத்தில் இராஜகம்பளத்தாரின் முகமாக அறியப்பட்டவர். திரு.ராஜு அவர்கள் இராஜேஸ்வரி சவுண்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி புகழ்பெற்றவர். சமுதாயப்பணி தவிர அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். திமுக-வில் இராசிபுரம் ஒன்றியப் பொருளாளராக பதவிவகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியமான திமுகழகக் குடும்பத்தில் பிறந்தவராதலால் தனது 12 வயது முதலே அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் திரு.சிவக்குமார் அவர்கள். திமுக-வில் அடிப்படை உறுப்பினராக குறைந்தபட்ச வயதை எட்டியவுடன் உறுப்பினராக இணைந்து தொட்டியபட்டி கிளைக்கழக செயலாளர், ஊராட்சிக் கழக செயலாளர் என படிப்படியாக உயர்ந்தார். கழகத்தின் தீவிரப் பற்றாளரான திரு.சிவக்குமார், கட்சி அறிவிக்கும் பல்வேறு போராட்டங்கள், மறியல்களில் கலந்து கொண்டு பலமுறை கைதானவர். மேலும் கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்கு பெருந்திரளான மக்களைத் திரட்டி கலந்து கொள்ளபவர். இவரின் தீவிர செயல்பாட்டாலும், விசுவாசத்தாலும் இராசிபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உயர்த்தப்பட்டார். அப்பதவியில் 6 ஆண்டுகள் தொடர்ந்த நிலையில்,  இராசிபுரம் ஒன்றிய துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டு, அப்பதவியில் கடந்த 5 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.  

2006-ஆண்டு உள்ளாட்சித் தேர்தலிலிருந்து தேர்தல் அரசியலில் பங்கேற்றுவரும் திரு.சிவக்குமார் அவர்கள், 30 வயதே நிரம்பிய இளைஞனாக 2006-உள்ளாட்சித் தேர்தலில் கோனேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறங்கி மிகச் சொற்பவாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்த தோல்விகளையெல்லாம் பொருட்படுத்தாத இளைஞனாக தீவிரமாக கட்சிக்கு உழைத்தவர் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சியில் விருப்பமனு அளித்து, தலைமை நேர்காணலில் கலந்து கொண்டர் திரு.சிவக்குமார்.


கட்சி அரசியல் தாண்டி, சமுதாயத்தினர் மீதும் பேரன்புகொண்ட திரு.சிவக்குமார் அவர்கள், தன்னைத்தேடி வரும் மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருகிறார். மேலும் இராசிபுரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வருடம் தோரும் நடக்கும் திருவிழாவில், இராஜகம்பளதார்களுக்கு ஒதுக்கப்படும் நாளில் முன்னின்று மக்களைத் திரட்டி சமுதாயத்தினருடன் இணைந்து பல்லாண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகிறார் திரு.சிவக்குமார். இதுதவிர திருமலைப்பட்டியிலுள்ள இரங்கநாதர் ஆலையத்தில் பட்டக்காரராக பொறுப்புவகிக்கின்றார். 2008-ஆம் ஆண்டு நாமக்கல்லை சேர்ந்த மக்கள் இயக்கம் என்ற தொண்டுநிறுவனம் திரு.சிவக்குமார் அவர்களை சிறந்த சமூக சேவகராக தேர்ந்தெடுத்து “திருவள்ளுவர் விருது” வழங்கி கௌரவித்தது. இதுதவிர ஹரிஹரன் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். 

பொதுவாழ்வில் நீண்ட நாள் பயணித்து வரும் திரு.சிவக்குமார் அவர்கள் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், இராசிபுரம் ஒன்றியம்,-8-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தனது துணைவியார் திருமதி.சந்திரா அவர்களை திமுகழக வேட்பாளராகக் களமிறக்கி வெற்றிவாகை சூடினார்.கடந்த இரண்டு தலைமுறையாக இயக்கத்திற்காக உழைக்கும் திரு.சிவக்குமார் குடும்பத்தை கௌரவிக்கும் விதமாக கழகம் திருமதி.சந்திரா சிவக்குமார் அவர்களுக்கு இராசிபுரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் பதவியை வழங்கியுள்ளது. பல்லாண்டுகளாக பொதுநலன் சார்ந்த பணிகளில் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் திருமதி.சந்திரா சிவக்குமார் தம்பதியினர், இப்புதிய வாய்ப்பின் மூலம் சமூகத்தில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு சாதி,மதம்,மொழி,இன பாகுபாடின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved