ஊராட்சி மன்றத் தலைவர் - ஊத்துக்குளி.திரு.M.சின்னசாமி
திரு.M.சின்னசாமி அவர்கள், 10.04.1967-ல் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செல்லும் வழியில், நாலுரோடு எனுமிடத்தில் திரு.மாரநாயக்கர்-திருமதி.பாப்பாத்தி அம்மாள் தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். தொடக்கப்பள்ளி கல்வியுடன் விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.C.ஜெய்சாந்தி என்ற மனைவியும் C.கார்த்திக்ராஜா என்ற மகனும் C.புவனேஸ்வரி, C.நித்திஷ்கா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இளம் வயதிலிருந்தே திராவிட இயக்க மேடைப்பேச்சுகள் மீது தீராத ஆர்வம்
கொண்டவர், திராவிட இயக்கப்போர்வாள் திரு.வைகோ அவர்கள் 1980-களில் நாடாளுமன்ற மாநிலங்களவையில்
எழுப்பிய “உரிமைக்குரலால்” கவரப்பட்டு, அவரின் தீவிர விசுவாசியானவர்களில்
திரு.சின்னசாமி அவர்களும் ஒருவர். திரு.வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம் தொடங்கியபொழுது, அதில் இணைந்து முழுநேர அரசியல்வாதியானார்.
1993-முதல் இன்றுவரை ஊத்துக்குளி ஒன்றிய மதிமுகவின் அவைத்தலைவராக கொண்ட கொள்கையில்
தடமாறாது, பல்வேறு தோல்விகளையும், சோதனைகளையும் கடந்து பயணிப்பவர்.கட்சியின்
அனைத்து நிகழ்ச்சிகள்,பொதுக்கூட்டங்கள், மாநாடுகளிலும் கலந்து கொள்பவர்,
மறியல்,ஆர்ப்பாட்டம், போராங்களிலும் கலந்து கொண்டு பலமுறை கைதாகியுள்ளார்.
கட்சி அரசியல் தாண்டி உள்ளூர் நிகழ்சிகளிலும், விசேஷங்களிலும்
முன்னின்று செயலாற்றி வரும் திரு.சின்னசாமி அவர்கள், உள்ளூர் பள்ளியில்
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக 5 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்பட்டார். தவிர,
அருள்மிகு.சுக்ரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவில் சுமார் 12 வருடங்கள்
செயலாளராகவும், பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பெரியபாளையம்
அருள்மிகு. பெருமாள்சாமி கோவிலின் முக்கிய காரியதர்சியாக இருந்து , வருடம் தோறும்
விழாக்களை சிறப்புடன் நடத்திவருகிறார். விவசாயம் தவிர ரியல் எஸ்டேட் நிறுவனமும்
நடத்தி, வெற்றிகரமான தொழிலதிபராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்
திரு.சின்னசாமி அவர்கள்.
சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் திரு.சின்னசாமி அவர்கள் முதன்முறையாக 1996 -ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.பெரியபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தன் துணைவியாரை களமிறக்கி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் 2001 நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வெறும் பத்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படி தொடர் தோல்விகள் துரத்திய பொழுதும், சற்றும் மனம் தளராமல் தன் தலைவரைப்போலவே பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் திரு.சின்னசாமி அவர்கள். அதனைத் தொடர்ந்து 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் களம் காணாமல், தொடர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து பயணித்து, அவர்களின் சுக,துக்கங்களில் பங்கெடுத்து தன்சேவையை தொடர்ந்து வந்தார்.
திரு.சின்னசாமி அவர்களுக்கான வாய்ப்பு சிலகாலம் தள்ளிப்போகத்தான்
முடிந்ததே தவிர, தப்பிக்க முடியவில்லை. ஆம். கடந்த 2019-டிசம்பரில் நடைபெற்ற
உள்ளாட்சித் தேர்தல் திரு.சின்னசாமி அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்
தோல்விகளுக்குப் பின்னரும் மக்களின் சேவையை தொடர்ந்த திரு.M.சின்னசாமி அவர்களின்
அர்ப்பணிப்பை அங்கீகரித்த மக்கள், 2019-தேர்தலில் எஸ்.பெரியபாளையம் ஊராட்சி மன்றத்
தலைவாராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
பல்லாண்டுகள் காத்திருந்து மக்களின் மனங்களை வென்று வெற்றிவாகை சூடிய
திரு.M.சின்னசாமி அவர்கள், இப்புதிய
பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி
பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள
கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன்
வேண்டி வாழ்த்துகிறோம்.