ஒன்றியக்குழு உறுப்பினர்- கரூர். திருமதி.செல்வி சின்னசாமி
திருமதி.செல்வி சின்னசாமி அவர்கள் 06.03.01970-ல் தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள மேலப்புலானந்தபுரம் கிராமத்தில் திரு.M.கந்தசாமி நாயக்கர் – திருமதி. ராமலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். திரு.R.சின்னசாமி (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களை மணமுடித்த திருமதி.செல்வி அவர்களுக்கு C.அபர்ணா M.B.A., C.ப்ரீத்தா B.E., என்ற இருமகள்களும் உள்ளனர்.
திரு.சின்னசாமி அவர்களின் பல்வேறு தொழில்களிலும் பங்குதாராகவும் சிறந்த குடும்பத் தலைவியாகவும் , ஆலோசகராகவும் விளங்கிய திருமதி.செல்வி சின்னுசாமி அவர்கள், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்டம், தந்தோன்றி ஒன்றிய 6 ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். அரசியலில் நீண்டகாலம் பயணித்து வரும் திரு.சின்னசாமி தம்பதியினர், சாதி, மதம், இனம், மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.