🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - கரூர். திரு.R.ஏகாம்பரம்

திரு.R.ஏகாம்பரம் அவர்கள் 13.10.1972-ல், கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி கிராமத்தில், திரு.R.ராஜேந்திரன் – திருமதி.பெருமாள் அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் எஸ்.எஸ்.ஏல்.சி வரை கல்வி பயின்றவர், தொழில்துறையின் மிகுந்த ஆர்வமுடையவர், பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டே, தொழில்துறைக்கேற்றாற்போல் தயார் செய்து கொண்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.E.அன்னம்மாள் என்கிற மனைவியும் E.ரம்யா என்ற மகளும் E.ராம்குமார் என்ற மகனும் உள்ளனர்.


தொழில் துறையில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன், 1993-இல் கரூரில் பிரபலமான தொழிலான “டெக்ஸ்டைல்ஸ் துறையில்”  அடியெடுத்து வைத்தார் திரு.ஏகாம்பரம் அவர்கள். தனது கடின உழைப்பாலும், சிறந்த நிர்வாகத்திறனாலும் டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார். விவசாயத்துடன் டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் வெற்றிக்கொடி நாட்டியவர், ரியல்எஸ்டேட் துறையிலும் கால்பதித்து வெற்றிவாகை சூடினார். மிகக்கடின உழைப்பால் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றவர், உள்ளூர் அளவிலும் பல நற்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  மக்களின் அனைத்து, சுக-துக்கங்களிலும் பங்கேற்று மக்களோடு மக்களாக இருந்து உதவி வந்தவர் திரு.ஏகாம்பரம் அவர்கள். 

இந்நிலையில், 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் திரு.ஏகாம்பரம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொழில்துறையில் அடுத்தடுத்த வெற்றறிகளை ஈட்டியவரை மக்கள் அரசியல் பக்கம் கொண்டுவந்து சேர்த்தனர்.  பொதுவாழ்வில் தொடர்ந்து ஈடுபட வற்புறுத்திய உள்ளூர் மக்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கோரிக்கையை ஏற்றவரை,  2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கரூர் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயோட்சையாக களமிறக்கி வெற்றி பெற வைத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பல அரசியல் கட்சிகளின் கவனத்தைப் பெற்றார். ஸ்திரமான எதிர்காலத்தையும், கிடைத்த பதவியின் மூலம் முழுபலன்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு கட்சி அரசியல் பக்கம் கவனத்தை திருப்பினார். அதனடிப்படையில் அஇஅதிமுகவில்  இணைந்து பணியாற்றியவர், ஒரு கட்டத்தில் முழுநேரத்தொண்டராக கட்சிக்கு  அசுரத்தனமாக உழைத்தார். தன் உழைப்பின் மூலம் கட்சியில் முன்னனி நிர்வாகிகளின் அன்பைப்பெற்றார். தவறென படும்பட்சத்தில், எப்படிப்பட்ட ஜாம்பவான்களையும் எதிர்த்து களமாடும் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் திரு.ஏகாம்பரம் அவர்கள். எந்த இடத்திலும், ஆசை வார்த்தைகளுக்கும் மயங்கிவிடாமல் கடைசிவரை உறுதியுடன் போராடும் குணத்தால் கரூர் மக்களின் கவனத்தைப் பெற்றவர். கட்சியின் அனைத்து நிகழ்விலும், பொதுக்கூட்டம், மாநாடுகளிலும் முன்களப்பணியாளராக நின்று களப்பணியாற்றக் கூடியவர்.


தொடர்ந்து 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு மீண்டும் கரூர் நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு.ஏகாம்பரம் அவர்கள். தன் பதவி காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியும், அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சென்று அப்பகுதி மக்களின் பேராதரவை பெற்றவர், தற்பொது அஇஅதிமுக- கரூர் தெற்கு நகர துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.ஏகாம்பரம் அவர்கள், மேலும் பல சாதனைகளைச் செய்து சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved