ஒன்றியப் பெருந்தலைவர்- விளாத்திகுளம்.திருமதி.சுசிலா தனஞ்செயன்
திருமதி.சுசிலா தனஞ்செயன் அவர்கள் 1965 ஆம் வருடம் விருதுநகரில் திரு.பொன்னையா என்ற திரு.முப்புடி நாயக்கர்-திருமதி.லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். மேல்நிலைக்கல்வி முடித்தவர், விளத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த திரு.M.தனஞ்செயன்.M.Sc (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதிகளுக்கு T.மகேஷ்வரசூரியன்.B.E., மற்றும் T.யுவகிருஷ்ணன்.B.E., என்ற இருமகன்கள் உள்ளனர்.
திருமதி.சுசிலா அவர்களின் கல்வித் தகுதியே அவர் குடும்ப செல்வாக்கையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும். 1970-களில் பெண்கள் மேல்நிலைக்கல்வி வரை பயில்வது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் பூர்வ விவசாயக்குடிகளாகவும், கரடு முரடான சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து வரும் கம்பளத்தார் சமுதாயத்தில், நகர்ப்புறப்பகுதியில் குடும்பங்கள் வசிப்பதும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியளவில் கல்வி கற்பது என்பது அரிதிலும் அரிதாக இருந்த காலகட்டம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இன்றைய இளம் தலைமுறையின ருக்கு பெரிய விசயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய தேதியில்கூட கம்பளத்தார் சமுதாய ஆண்களின் சராசரி கல்வித்தகுதியை விட அதிகம் என்பதை சமுதாயத்தை நன்கு கூர்ந்து கவனிப்பவர்கள் உணரலாம். அதற்கேற்றாற்போல் இவரது தாய்மாமன் திரு.ஆண்டைய நாயக்கர் அவர்களும், தாய்வழிக்குடும்பமும் விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் மிகவும் பிரபலமான, செல்வாக்குமிக்க குடும்பமாகவும் இருந்தது.
திருமதி.சுசிலா அவர்களின் குடும்ப பாரம்பரியத்திற்கும், பின்னணிக்கும் சற்றும் குறைவில்லாதா, விளாத்திக்குளம் பகுதியில் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த திரு.M.தனஞ்செயன்.M.Sc., அவர்களுக்கு திருமதி.சுசிலா அவர்களை மணமுடித்ததின் மூலம் சமுதாயத்திலுள்ள இருபெரும் குடும்பங்களின் இணைப்பு இனிதே நடைபெற்றது. இளம்வயதிலிருந்தே அரசியலில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் திரு.M.தனஞ்செயன் அவர்களின் பொதுவாழ்வில் பிரகாசிப்பதற்கு உற்றதுணையாகவும், சிறந்த ஆலோசகராகவும் இருந்துவருகிறார் திருமதி.சுசிலா அவர்கள். மேலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையை இன்றளவும் கடைபிடித்து வரும் மிகப்பெரிய குடும்பத்தின் மூத்த மருமகளாக சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக பொறுப்புடன் நிர்வாகித்து, இளம் தலைமுறைப் பெண்களுக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தேர்தல் அரசியலுக்கு புதியவராக இருந்தபோதிலும், அனைத்திந்திய அண்ணா திமுக வில் அடிப்படை உறுப்பினராக நீண்டகாலமாக இருந்து வருபவர் திருமதி.சுசிலா அவர்கள். திரு.M.தனஞ்செயன் அவர்கள் தேர்தல் களக்கண்ட போதிலெல்லாம் தீவிர களப்பணியாற்றிய அனுபவமிக்கவர். எனவே இதுவரை தேர்தல் களத்தில் நேரடியாக போட்டியிடவில்லையே தவிர அரசியலை அறிந்திராதவர் அல்ல. இந்தப் பின்னணியுடன் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விளாத்திக்குளம் புதூர் ஒன்றியம்----- வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு அ இஅதிமுக சார்பில் களம் கண்டு மகத்தான வெற்றி பெற்றார். குடும்ப பாரம்பரியம், கல்வித் தகுதி, பொதுமக்கள் மற்றும் சமுதாய மக்களிடமுள்ள செல்வாக்கு, கட்சிப்பணி, கட்சித் தலைமையின் மீதான விசுவாசம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு என சகல தகுதிகளையும் பெற்ற திரு.தனஞ்செயன் குடும்பம் மற்றும் அவர்சார்ந்த சமுதாயத்திற்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் பொருட்டு திருமதி.சுசிலா அவர்களுக்கு “ஒன்றியப் பெருந்தலைவர்” பதவியை வழங்கி அதிமுகழகம் பெருமைப் படுத்தியுள்ளது. இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள ஒரே பெருந்தலைவர் பதவி என்பதும், அதுவும் பெண் பெருந்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கௌரவத்தை அளித்து சமுதாயத்தை பெருமைபடச் செய்துள்ள அதிமுக தலைமைக்கும், மாவட்டக் கழக தலைமைக்கும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமுதாயத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளையில் இப்புதிய பொறுப்பின் மூலம் திருமதி.சுசிலா தனஞ்செயன் தம்பதியினர் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும் , சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.