ஒன்றியக்குழு உறுப்பினர் - அரவக்குறிச்சி.திரு.P.பாலசுப்பிரமணியன்
திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் 12.06.1977-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள பால்வார்பட்டியில் திரு.பழனிச்சாமி- திருமதி. முத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாக பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி.வரை கல்வி பயன்றவர், பெற்றோர்களுக்கு உதவியாக தீவிர விவசாய பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.B.கவிதா என்ற மனைவியும் B.கிருபாகரன், B.கிஷோர்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
விவசாயப்பணிகளுக்கிடையே, நிதி நிறுவனமும் நடத்தி வரும் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள், பொதுவாழ்விற்கு புதிய வரவு. பொதுவாழ்வில் ஈடுபடும் எண்ணத்துடன் அஇஅதிமுக-வில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டவர், கழக நிகழ்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
பொதுவாழ்விற்கு காலதாமதமாக வந்தாலும், தேர்தல் அரசியலுக்கு உடனடியாக வந்தவர், கடந்த டிசம்பர் 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அரவக்குறிச்சி ஒன்றியம், 3-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் அ இஅதிமுக சார்பில் களமிறங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றிபெற்று ஒன்றிய கவுன்சிலாராக தன் பொதுவாழ்வைத் தொடர்கிறார் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.