ஒன்றியக்குழு உறுப்பினர்-சத்தியமங்கலம்.திரு.B.சம்பத்குமார்
திரு.B.சம்பத் குமார் அவர்கள், 08.04.1980-ல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள காளிகுளம் கிராமத்தில் திரு.பொம்மநாயக்கர் – திருமதி.நஞ்சம்மாள் தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணிக்கு திரும்பினார்.
மாணவப் பருவம் முதலே அரசியலில் ஆர்வமுடையவர், தனது 20-ஆவது வயதில் திமுக வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஏறக்குறைய பதினைந்தாண்டுகளுக்கு மேலாக பொதுப்பணியில் ஈடுபட்டு வரும் திரு.சம்பத் குமார் அவர்கள், கட்சி அழைப்பு விடுக்கும் மறியல், ஆர்ப்பாட்டம்,போராட்டங்களில் பலமுறை கலந்துகொண்டு கைதாகியுள்ளார். மேலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுன், மாநாடுகள், பொதுக் கூட்டங்களுக்கு பெருமளவு கட்சியினரை அழைத்துச்சென்று கலந்து கொண்டு வருகிறார். திமுகழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்த காலத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிட உறுதுணையாக இருந்ததுடன், முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு வங்கிக்கடன், சுய உதவிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு வகைகளில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.
2006 -ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உக்கரம் ஊராட்சி, காளிகுளம் வார்டு உறுப்பினர் தேர்தலில் களம் கண்டு தன் முதல் வெற்றியை பதிவு செய்தார். மீண்டும் 2011-ல் அதே வார்டில், ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திரு.சம்பத் குமார் அவர்கள், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியதுட, காங்கிரீட் சாலைகள், தெருவிளக்கு அமைத்தல், பொதுக்கழிப்பிடம் அமைத்தல், சாக்கடை வசதியை மேம்படுத்துதல் என மக்கள் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், சத்தியமங்கலம் 14 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினராக பதவிக்கு திமுகழக வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார். தேர்தல் களத்தில் தொடர் வெற்றிகளை பதிவு செய்துவரும் திரு.சம்பத்குமார் அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.