ஊராட்சி மன்றத் தலைவர் - உசிலம்பட்டி. திரு.A.மகாராசன்
திரு.A.மகாராசன் அவர்கள் 1958 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள பானாமூப்பன்பட்டி கிராமத்தில் திரு.அய்யாரப்ப நாயக்கர் - திருமதி. பாப்பாத்தியம்மாள் தம்பதியர்க்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கக்கல்வி வரை கல்வி பயின்றவர், தீவிர விவசாயப் பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு திருமதி.M.கண்ணம்மாள் என்ற மனைவியும், M.மகாராணி என்ற மகளும் M.மார்க்கண்டேயன் என்ற மகனும் உள்ளனர்.
தீவிர திராவிடப்பற்றாளரான திரு.மகராசன் அவர்கள் தனது 12-வயதிலிருந்தே திமுக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பணியாற்றி வருகிறார். ஏறக்குறைய கால்நூற்றாண்டு காலம் அடிப்படை உறுப்பினராகவே கட்சிப்பணியாற்றி வந்தார் திரு.மகாராசன். மிக நீண்ட காலப் பணிக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு கிளைச்செயலாளர் பதவி தேடிவந்தது. கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு வரும் திரு.மகராசன் அவர்கள், கட்சியின் நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்களிலும் பெருமளவு கட்சியனரைத் திரட்டி கலந்துகொண்டு வருகிறார். உள்ளூர் மக்களின் சுக-துக்கங்களிலும், நல,புலங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு எளிய மனிதராக வாழ்ந்து வருபவர் திரு.மகாராசன் அவர்கள்.
1970-களிலிருந்தே அரசியலில் பயணித்திருந்தாலும், அரைநூற்றாண்டு காலம் தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கு கொள்ளாதவர், கடந்த 2019 டிசம்பர் மாதம் உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.மகராசன் அவர்கள், சாதி, மதம் ,இனம், மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.