🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர்- சத்தியமங்கலம்- திரு.V.N.சின்னசாமி

திரு. V.N.சின்னசாமி அவர்கள் 16.05.1958 ஆம் ஆண்டு  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள வேடசின்னானூர் கிராமத்தில் திரு.நடுமார நாயக்கர், திருமதி சென்னம்மாள் தம்பதிகளுக்கு, விவசாய குடும்பத்தில், மகனாகப் பிறந்தார். தொடக்கப் பள்ளி அளவில் கல்வி கற்றவர், பின் விவசாயப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.இவருக்கு திருமதி. C.சகுந்தலா என்ற மனைவியும், C.கார்த்திகேயன் என்ற மகனும், C.சரஸ்வதி என்ற மகளும் உள்ளனர்.


1990 ஆம் ஆண்டு அருள்மிகு கரிகாளியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். 2011 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 வரை பணியாற்றிய காலத்தில், தன் துடிப்பான செயல்பாட்டாலும், நேர்மையான நிர்வாகத்தாலும், கட்சி, இன, மத, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்ற பாங்கினால், அக்கிராம மக்களின் மனங்களை வென்றவர். அதற்கு சாட்சியாக 2019 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சத்தியமங்கல ஊராட்சி ஒன்றியம் 12 ஆவது வார்டு குழு உறுப்பினராக மக்கள் மீண்டும் திரு.வி.என்.சின்னசாமி அவர்களுக்கு மணிமகுடம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரு.வி.என்.சின்னசாமி அவர்கள் அரசியல் பொதுவாழ்வில் மேலும் சிகரங்களை தொட்டிட அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved