🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேரூராட்சி துணைத்தலைவர் பதவியை வென்ற திருமதி.சுதாமணி!

திருமதி.சுதாமணி கார்த்திகேயன் அவர்கள் 17.05.1981-இல் கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள வக்கம்பாளையம் கிராமத்தில் திரு.சுப்பையன் - திருமதி.கிருஷ்ணவேணி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். உடுமலை அரசுக் கல்லூரி முன்னாள் மாணவியான திருமதி.சுதாமணி புள்ளியியல் துறையில் (B.Sc., Statistics) இளங்கலை பட்டம் பெற்றவர். சுதாமணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை மணமுடித்தார். இத்தம்பதிகளுக்கு K.விஷ்ணு பிரசாத் என்ற மகனும் K.யோகவர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனோ தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு இயற்கை எய்திய தெய்வத்திரு.கார்த்திகேயன் ஆயக்குடி திரு.சின்னசாமி – திருமதி.மாணிக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் கட்டிடத்துறையில் பட்டயம் பெற்றவர்.  

மாணவப்பருவத்திலிருந்தே தி.மு.க வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றிய கார்த்திகேயன், 1989-ஆம் ஆண்டு T.K.N.புதூர் கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி மாணவராக இருந்தபொழுது இலங்கைத் தமிழர் பிரச்சினை, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். 1997 முதல் 2002  வரை பழனி ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளராக பொறுப்பு வகித்தவர். 2003-2011 வரை திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதியாகி பொறுப்புவகித்தவர் கார்த்திகேயன். 


கார்த்திகேயனின்  சிறப்பான தொடர் கட்சிப்பணியால், 2006-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார். 2011-வரை பேரூராட்சித் தலைவராக பொறுப்பு வகித்த பொழுது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரீட் சாலைகள், நீர்தேக்கத்தொட்டிகள், உயர்மட்ட டேங்குகள், தெருவிளக்கு, குடிநீர் வசதி, மயான வசதி, அங்கன்வாடி மையம், ரேசன் கடைகள், ஏழை-எளியவர்களுக்கு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தந்து மக்களின் மனங்களில் நீங்க இடம் பெற்றவர்.

2012-முதல் இறக்கும் தருவாய் வரை ஆயக்குடி பேரூர்கழகச் செயலாரக பொறுப்பு வகித்து வந்த கார்த்திகேயன், கடந்த 2016, 2021 சட்டமன்றத் தேர்தலிலும், 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியின் வேட்பாளக்கு தன் பகுதியில் மிக அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்து மாவட்ட கட்சித் தலைவர்களின் நம்பிக்கையை பெற்றார். 

கொரானோ முதல் அலையின் பொழுது கட்சித் தலைமையின் உத்தரவிற்கிணங்க நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கெடுத்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

 அதனையடுத்து  நடைபெற்ற 2021 சட்டமன்றத்தேர்தலில் கழகத்தின் இளம்தலைவர்களில் ஒருவரான ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றிக்கு இரவு பகலாக பாடுபட்டு அவரின் அன்புக்கு பாத்திரமானவர்,  கட்சியிலும், உள்ளாட்சி பதவியிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுவார் என்று அனைவரும் கணித்திருந்த நிலையில் எதிர்பாராத நிலையில் கொரோனோ இரண்டாம் அலையில் உயிர் இழந்தது கட்சியிலும், சமுதாயத்திலும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

கார்த்திகேயன் அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது என்றாலும் கணவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக இருந்த திருமதி.சுதாமணி அவர்கள் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட  2-வது வார்டில் திமுகழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆயக்குடி பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், திருமதி.சுதாமணி அவர்களுக்கு துணைத்தலைவர் பதவி வழங்கி மறைந்த கார்த்திகேயன் கட்சிக்காற்றிய நீண்ட கால உழைப்பையும், விசுவாசத்தையும் அங்கீகரித்துள்ளது மாவட்டத் தலைமை. கார்த்திகேயனின் இடத்தை நிறப்ப வேண்டிய இடத்திலுள்ள திருமதி.சுதாமணி இந்த சவாலான வாய்ப்பை எதிர்கொள்வதற்கான கல்வியறிவும், சிந்தனைத் திறனும் மிக்கவர் என்பதில் ஐயமில்லை. அதை பொதுவெளியிலும் நிர்ருபிக்கக் கிடைத்த அறிய வாய்ப்பாக எடுத்துக்கொணடு கட்சியிலும், நிர்வாகத்திலும் மிகப்பெரிய பதவிகளைப்பெற்று அரசியலில் பல உயரங்களைத் தொட்டு, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved