🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி நாயகி! - திருமதி.சித்ராதேவி

திருமதி.சு.சித்ராதேவி M.B.A., அவர்கள் 08.05.1985-இல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி கிராமத்தில் திரு.குருசாமி நாயக்கர் - திருமதி.லதா மகேஸ்வரி அவர்களுக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். மதுரை லேடி டோக் (Lady Doak) கல்லூரியில் இளநிலை (B.B.A) வணிக நிர்வாகமும், விருதுநகர் VHNSN கல்லூரியில் முதுநிலை (M.B.A) வணிக நிர்வாகவியல் பட்டமும் பெற்றுள்ளார். 

கல்லூரி படிப்பை முடித்தவர் கோவையிலுள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணியாற்றினார். அதன்பிறகு சில காலம் சேலம், மதுரை ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீராம் நிதி நிறுவனத்திலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் திருமதி.சித்ராதேவி.

2012-ஆம் ஆண்டு விளாத்திக்குளம் புதூர் ஒன்றிய அதிமுக செயலாளரும், மாவட்டக்குழு உறுப்பினரும், சமுதாய மூத்த தலைவருமான திரு.ஞானகுருசாமி அவர்களின் மகன் திரு.சுரேஷ்குமாரை மணமுடித்துள்ள இத்தம்பதிக்கு S.மதிவதனா, S.ருத்ரசேனா, என்ற இருமகள்களும், S.திருஞானவேல் என்ற மகனும் உள்ளனர். திரு.சுரேஷ்குமார் அவர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிகுறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வணிக நிர்வாகவியல் முதுகலை பட்டதாரியான திருமதி.சித்ராதேவியின் தந்தையார் திரு.குருசாமி நாயக்கர் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் தீவிர ஆதரவாளர் என்ற வகையில் அரசியல் குழந்தைப் பருவத்திலிருந்தே அறிமுகமாயிருந்தது. அரசியல் குடும்பத்தில் 2012-இல் மணமுடித்தவருக்கு 2016-இல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றிருந்த நிலையில் தேர்தல் எதிர்பாரத விதமாக ரத்து செய்யப்பட்டதில் வாய்ப்பு தள்ளிப்போனது.

மீண்டும் கடந்த பிப்ரவரி-19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அரசியல் களத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இளம் அரசியல் தலைவராக வளம் வர அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள திருமதி.சித்ராதேவி அவர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினராக சாதி,மதம்,இனம்,மொழி கடந்து அனைத்து தரப்பினருக்கும் பணியாற்றி வரும்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளை அரசியலில் பெற்று பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்து பெருமைப்படுத்த வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved