🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி வேந்தர்! - திரு.N.முனீஸ்வரன்

திரு.N.முனீஸ்வரன் அவர்கள் 12.05.1974-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள புதூர் கிராமத்தில் திரு.நாகப்பன்-திருமதி.அய்யரக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இடைநிலைக்கல்வி வரை பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி. வேலுமணி என்ற மனைவியும், M.யாழினி மற்றும் M.முத்தரசி என்று இருமகள்களும் உள்ளனர்.

பொதுவாழ்வில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1999-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடைப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றத்துவங்கிய திரு.முனீஸ்வரன் , 2006- ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை சுமார் பத்து வருடங்கள் புதூர் பேரூர்க்கழக செயலாளராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அக்கட்சியில் இணைந்த ஒருசில மாதங்களில் ஒன்றிய அம்மாபேரவைத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவர் இன்றுவரை அப்பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இடைப்பட்ட காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் தற்பொழுது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

2016-ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலில் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டில் சுயோட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி'19-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றிபெற்ற நிலையில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற ஒருசிலரில் திரு.முனீஸ்வரன் அவர்களும் ஒருவர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் திரு.முனீஸ்வரன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு எந்தவிதமான சாதி,மத பேதமின்றி பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved