🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி நாயகி! - திருமதி.சுதா பிரதாபன்

திருமதி.P.சுதா (37) அவர்கள்  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கொடிவேரி கள்ளிப்பட்டி கிராமத்தில் ஊர்நாயக்கர் தெய்வத்திரு-ரங்கசாமி -திருமதி.ராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இடைநிலைக்கல்வி வரை பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டு வந்தார். திரு.K.A.பிரதாபன் அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு S.P.ஜெகத்ரட்சகன், S.P.அனுப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர்.


திரு.K.A.பிரதாபன் (45) அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகளூர் கிராமத்தில் ஊர்நாயக்கர் திரு.K.S.அமுல்ராஜ் - திருமதி. ரங்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைக்கல்வி வரை பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார். திரு.K.A.பிரதாபன் அவர்கள் கூகளூர் கிராமத்தின் 7-வது தலைமுறை ஊர்நாயக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


தீவிர அதிமுக தொண்டரான திரு.K.A.பிரதாபன் அதைவிட சமுதாயத்தின் மீது பற்றுக்கொண்டவர். விடுதலைக்களம் கட்சியில் முக்கிய பொறுப்பாளராக இருப்பவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் சட்டமன்றத்தொகுதியில் விடுதலைக்களம் கட்சியின் ஆதரவுடன் சுயோட்சையாக போட்டியிட்டவர். அன்றைய முக்கிய அமைச்சரின் வேண்டுகோளையும், சமாதானத்தையும் புறந்தள்ளி துணிச்சலுடன் களம் கண்டவர் 2545 வாக்குகள் பெற்று பிரதானக்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அத்தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை தொகுதிகளை அறுவடை செய்த அதிமுக ஆயிறத்து நூறு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-விடம் தொகுதியை பறிகொடுத்தது. இதனையடுத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இவர் பெற்ற வாக்குகள் பிரதான பேசுபொருளாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.


சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைப் பறிகொடுத்த திரு.பிரதாபன், கடந்த பிப்ரவரி'19-இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் ஆளும்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக தனது துணைவியார் திருமதி.சுதா அவர்களை விடுதலைக்களம் கட்சியின் ஆதரவுடன் சுயோட்சை வேட்பாளராக களமிறக்கினார். கடுமையான மும்முனைப்போட்டியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து தனது துணைவியாரை மகத்தான வெற்றி பெறவைத்துள்ளார். கூகளூர் பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில் 14-ஐ வென்ற திமுக 13-வது வார்டில் திருமதி.சுதா பிரதாபனிடம் தோல்வியைத் தழுவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிழப்பியது. தொடர்ந்து சமுதாயத்தை அரசியல் மயப்படுத்த போராடிவரும் திரு&திருமதி.சுதா பிரதாபன் தம்பதியினர் கட்சிகளை மீறி வாக்களித்த மக்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றி மேன்மேலும் வெற்றிகளைப்பெற வாழ்த்துகிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved